பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கமபனான சகோதரதவமும சமகாதராகளும் 272 உற்றார் உறவினர், தாய் தந்தை மார் முதலிய நமக்கு வேண்டிவர்கள் தீயவை செய்தால் தருமம் பார்ப்பவர்கள் அவர்கள் பக்கம் நிற்க மாட்டார்கள். நீ நன்றாக அதை அறிவாய், உனக்கு நான் அதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தூய்மையாக நடக்கத் துணியும் போது பழி வந்து தொடராது அல்லவா? “தீயவை செய்வர் ஆகில் சிறந்தவர் பிறந்த உற்றார் தாய் அவர், தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் நீ அவை அறிதி அன்றோ? நினக்கு யான் உரைப் பது என்னோ? துயவை துணிந்தபோது பழி வந்து தொடர்வது உண்டோ?” என்றும் இவ்வாறாக பல சிறந்த கருத்துக்களையும் வாதங்களையும் நியாயங்களையும் எடுத்துக் கூறி வீடணன் கும்பகருணனை இராமன் பக்கம் வந்து விடும் படியாகக் கூறுகிறான். கும்பகருணன் நல்லவன். தவறு இழைக்காதவன், தீவினை செய்யாதவன், சகோதரபாசம் கொண்டவன், தம்பியிடம் அதிகமான அன்பும் பரிவும் கொண்டவன், தான் எந்தக் குற்றமும் செய்யாமல் மற்றவன் செய்த குற்றத்திற்காக ஏன் அவன் தன் உயிரை விட வேண்டும் என்பது ஒரு கேள்வி. அடுத்தது, கும்பகருணன் இராமனைப் பற்றி நன்கு அறிந்தவன். தருமம் பார்ப்பவன், தருமநெறி உணர்ந்தவன். அதை அறிந்தவன், எனவே அக்கும்பகருணனிடம் நியாயத்தையும் தருமத்தையும் தரும நீதியையும் தெய்வத்தையும் தெய்வ நீதியையும் பற்றி எடுத்துக் கூறித் தனது சகோதர பாசத்தையும் உணர்வையும் முன் வைத்துத் தன் பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்று விடணன் முயற்சி செய்கிறான். கடைசியாக வேதநாயகனையும் முன் வைத்துத் தனது அண்ணனை வேண்டுகிறான். “வேத நாயகனே உன்னைக் கருணையால் வேண்டி விட்டான் காதலால் என் மேல் வைத்த கருணையால், கருமம் ஈதே