பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 293 அரசு இருக்க வேண்டும் என்னும் சிக்கலான பிரச்சனைகள், கதையில் பின்னப் பட்டு, நாட்டுப் பிரிவினை, சூதாட்டம், வனவாசம், அஞ்ஞாத வாசம், துTது, சமரச முயற்சி, போர் இவ்வாறு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று இறுதியில் போரில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறார்கள். மகாபாரதக் கதையில் பாண்டவர்களும் கவுரவர்களும் தங்களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டுமென்று விரும்பியவர்கள் அதனால் போட்டி, பொறாமை, போர் என்று ஏற்பட்டன. ஆனால் இராமாயணக் கதையில் அரசியல் அதிகாரப் பிரச்சனைகளில் இராமன், பரதன், சுக்கிரீவன், வீடணன் ஆகியோர் தங்களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டுமென்று விரும்பி வேண்டி, அதனால்ஏற்பட்ட போட்டிகளோ மோதல்களோ, போர்களுே-இல்லை. காலத்தின் நிகழ்ச்சிப் போக்குகளில் ஏற்பட்ட) சூழ்நிலைகள் காரணமாகவும் நெறி முறைகளின் காரணமாகவும் ஏற்பட்ட சிக்கல்களினாலும் அரசியல் தகராறுகள் ஏற்பட்டிருக்கின்றன. அவ்வாறு ஏற்பட்ட அரசியல் தகராறுகள் உரிய முறையில் தீர்க்கப் பட்டிருக்கின்றன என்பதையும் காண்கிறோம். அயோத்தியில், மூத்தவனான இராமனுக்குப் பட்டம் சூட்ட மரபுப்படியும், அரசன் தசரதனுடைய விருப்பப்படியும் ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. இராமன் மூத்தவன் மட்டுமல்ல, நல்லவன், வல்லவன், அரசனாவதற்கு எல்லாத் தகுதிகளும் உள்ளவன்தான். ஆயினும் கைகேயி, தசரத மன்னனின் மனைவியருள் வல்லவள், திறமையும் செல்வாக்கும் மிக்கவள்,வலுவான அரச குடும்பத்தில் பிறந்தவள், அரசனையே ஒரு முறை போரில் காப்பாற்றியவள், வரம் பெற்றவள், வலுவான பின்னணி உள்ளவள், எனவே தனது திறமையால், செல்வாக்கால், அரசியல் சூழ்ச்சி செய்து தன் மகன் பரதனுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டுமென்று கோரிப் பெற்று அதற்குப் பாதுகாப்பாக இராமனைக் காட்டிற்கும் அனுப்புகிறாள். ஆயினும் பின்னர் பரதன் இதை அறிந்த போது, தனது தாயின் நிலையை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றும் இதர நிகழ்ச்சிகளை நாம் அயோத்தியின் களத்திலும் கதை நிகழ்ச்சிகளிலும் காணலாம். கிட்கிந்தையில் மூத்தவனாகவும், அரசனாகவும், இருந்த வாலி கொல்லப்பட்டு, இளையவனான சுக்கிரீவன் ஆட்சி அதிகாரத்தைப்