பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*H = H கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் _1_i இந்தியப் பேரிலக்கியங்களை நமது அறிஞர்கள் மறுபடிப்பும் மறு ஆய்வும் செய்யத் தொடங்கினர். தேசீய விடுதலை இயக்கத்தின் தொடக்கக் காலத் தலைவர்கள் பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களைத் தங்கள் லட்சிய நூல்களாகக் கொண்டனர். இராமனையும் இலக்குவனையும் கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் தங்களுடைய லட்சிய புருஷர்களாகக் கண்டனர். தெய்வ பக்தியை இணைத்து அதை தேச பக்தியாக வளர்த்தனர். பகவத் கீதையின் நிவ்காமிய கர்மக் கட்டளையை சொந்தப் பலன் எதையும் எதிர் பார்க்காமல் நாட்டின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென்பதைத் தேச பக்தக் கட்டளையாக மாற்றுவதற்குக் கீதா ஞானத்தைப் பயன் படுத்தும் புதிய மார்க்கத்தைக் கண்டார்கள். பாரதப் போர் தர்மயுத்தம் என்று கூறப் பட்டதைப் போல விடுதலைப் போராட்டத்தைத் தர்ம யுத்தமாகக் குறிப்பிட்டு மகாபாரதக் கதை மூலம் நாட்டு மக்களுக்கு உயிரும் உணர்வும் எழுச்சியும் 925IIL-L_LJ LULL-95]. இராமன் காட்டு வழியே சென்று அல்லல் பட்டதைப் பெரும் தியாகமாக விவரித்து, அதே போல நாட்டு மக்கள் தங்கள் விடுதலை லட்சியத்திற்காக நாட்டு ஒற்றுமைக்காக ஒருமைப்பாட்டிற்காக, நாட்டு முன்னேற்றத்திற்காக எத்தகைய இன்னலையும் தாங்கித் தியாகம் செய்யத் தயாராவதற்கு இராம காதை மூலம் உயிரும் உணர்ச்சி வேகமும் ஊட்டப் பட்டது. இவ்வாறு நமது பண்டைய இலக்கியங்கள் சாத்திரங்கள் மூலம் புதிய தரிசனம் காணப் பட்டது. பாரதியைப் போன்ற தேசீயக் கவிஞர்கள் இராமனையும் இலக்குவனையும் பரதனையும் அனுமனையும், சீதையையும் பாஞ்சாலியையும், கிருஷ்ணனையும், அர்ஜுனனையும், வீட்டுமனையும் கர்ணனையும் பீமனையும் உதாரணம் காட்டி நமது பழைய இலக்கியங்களுக்கு புதிய ஒளியைக் கொடுத்துக் கம்பனையும் வியாசனையும் வால்மீகியையும் பாராட்டி நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார்கள். நமது இலக்கியங்களுக்குப் புதிய காட்சியைக் கொடுத்தார்கள். நமது மகத்தான காவியங்களைத் தங்கள் சொந்தக் கருத்துக்களின் வக்கிரத்தோடு பார்க்காமல் அவைகளின் காலத்தோடு இணைத்துப் பார்த்து இன்றையப்