பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. subuggyeo–u கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 50 ஏகாம்பரேஸ்வரரும் வரத ராஜப்பெருமாளும், சென்னையில் மயிலையும் திருவல்லி கேணியும் காவிரிக்கு நடுவில் திருவரங்கமும், திருவானைகாவலும், மதுரையில் மீனாட்சி சுந்தரரும் கூடலழகரும், ஒரிஸாவில் புவனேஸ்வரரும், பூரி ஜெகன்னாதரும், நெல்லையில் காந்திமதி நாதரும், நவ திருப்பதிகளும் உத்தரப்பிரதேசத்தில் காசியும் அயோத்தியும் மதுராவும், குஜராத்தில் சோமநாதரும், துவாரகையும், இமயத்தில் பத்ரிநாதரும், கேதார் நாதரும் சிறந்த எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன. பொதுவாக இந்து வழிபாட்டு நம்பிக்கையில் படைத்தல் கடவுளாக பிரம்மாவும், காத்தல் கடவுளாகத் திருமாலும், அழித்தல் (நீக்கல்) கடவுளாகச் சிவபெருமானும் போற்றப் படுகிறார்களென்பதை ஏற்கனவே கண்டோம். இதை முத்தொழில் என்று சாத்திரங்களும் இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. இந்த முத்தொழில்களையும் பொதுவாகக் குறிப்பிட்டுக் கம்பன் தனது இராமாயணக் காவியத்தில் முதலாவது காண்டமான பால காண்டத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலைப பாடியுளளாா. “உலகம்யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையாரவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே! ” என்பது கம்ப நாடரின் முதல் பாடலாகும். இப்பாடலில் கம்பன் அழித்தலென்னும் சொல்லுக்கு பதிலாக நீக்கல் என்னும் சொல்லைக் குறிப்பிட்டுருப்பது மிகவும் சிறப்பானதாகும் காரணம், உலகில் எந்தப் பொருளும் அழிவதில்லை. மாறுதல்தான் அதாவது நிலை மாற்றம் தான் ஏற்படுகிறது. ஒவ்வொரு பொருளிலும் பழைய நிலை நீங்கிப் புதிய நிலையேற்பட்டு, நிலை மாற்றம் கொள்கிறது. “பழயன கழிதலும் ”, என்றே இலக்கணம் கூறுகிறதேயல்லாமல் “பழையன அழிதலும்” என்று குறிப்பிடவில்லை. எனவே கம்பனுடைய இந்த நீக்கல் என்னும் சொல் உண்மை நிலைக்கு மிகவும் நெருக்கமாகவுள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.