பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ztölcë - ©Ø øøøruč Lmfovou - 2. džofio/nocêî 59 வால்மீகி காலத்திலும் அதற்கு முன்னரும் கூட இராமன் கதை மக்களிடையில் பரவலாக மக்களிலக்கியமாகப் பரவியிருந்தது. கம்பனுடைய வாக்கின் படியே கூட தேவாபடையில் இக்கதை செய்தவர், மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினார் உரையின் படி நான் தமிழ்ப்பாவினால் உணர்த்திய பண்பு” என்று குறிப்பிடும் பாடலில் “முந்திய நாவினார் உரையின் படி” என்னும் வரிக்குச் சிறந்த நாவன்மையுடைய வால்மீகி முனிவர்” என்றும் பொருள் கொள்ளலாம், 'மூவருக்கும் முன்பு வாய் வழியாகக் கர்ணபரம்பரையாக கூறப்பட்டு வந்திருந்த கதையின் படி” என்றும் கூடப் பொருள் கொள்ளலாம். ஆயினும் காலத்தால் பாரத நாட்டு மக்களுடைய உள்ளங்களில் வாய் வழியாகவும் காவியங்கள் வழியாகவும், இராமன் தங்களது மனதிற் கினிய, நம்பிக் கைக்குரிய, வணக்கத்திற்குரிய, பாராட்டுக்குரிய, வழிபாட்டுக்குரிய கடவுளாக நிலை பெற்று விட்டதைக் காண்கிறோம். நமது நாட்டில் நமது சமுதாயத்தில் எழுந்த பல வீரர்களும், சிறந்த ஆற்றல் மிக்க தலைவர்களும், அறிவிற் சிறந்த வழி காட்டிகளும், கடவுள் நிலைக்கு உயர்த்தப் பட்டிருக்கிறார்கள். ஒருவருக்கு சிலை வைத்தாலே அது உருவ வழிபாட்டின் சின்னமேயாகும். கம்பன் இராமனைத் திருமாலின் அவதாரமாகப் பாவித்துத் தனது மகத்தான காவியத்தை சிறப்பித்துள்ளார். இந்த இடத்தில் மூதறிஞர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தனது இராமாயண நூலில் வால்மீகியும் கம்பனும் என்னும் தலைப்பில் எழுதியுள்ள கருத்துக்களை நினைவில் கொள்வது நல்லதாகும். மூதறிஞர் இராஜாஜி அவர்கள் ஒரு சிறந்த அரசியல் தலைவர். இராஜ தந்திரி, சமூக சிந்தனையாளர், சிறந்த இலக்கியப் படைப்பாளரும் எழுத்தாளருமாவார். காலத்தால் தமிழகத்தில் எற்பட்ட ஒரு அரசியல் சமுதாய சூழ்நிலையில் “சக்கரவர்த்தித் திருமகன்’ என்னும் தலைப்பில் இராஜாஜி அவர்கள் உரைநடையில் இராமாயணத்தை எழுதினார். பாரத நாட்டிற்கு அவர் செய்துள்ள சேவையில் உரைநடையில் இராமாயணமும் மகாபாரதமும் எழுதிய சேவை முக்கிய இடம் பெற்று விட்டது. எனவே சற்று அதிகமாக இருந்தாலும் நிண்ட மேற்கோளாக இருந்தாலும் அதை இங்கு