பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ғылшейт — «РФ «Qрғылшй шптisови —зу. «osofkstлтемей 7| ஆதலின் கொல்லல் ஆகாது அம்பிது பிழைப்பது அன்றால் யாது இதற்கு இலக்கமாவது? இயம்புதி விரைவில்” என்றான். உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களையெல்லாம் நீ அழித் தொழித்தாயென்றாலும், வேதங்களையெல்லாம் நன்கறிந்து தெளிந்த வேத வித்த கனான உயர்வான வொரு மேன்மை மிக்க பிராமணனுடைய மகன் நீ, அத்துடன் தவமும் பூண்டுள்ளாய் அதனால் உன்னைக் கொல்லல் ஆகாது. ஆயினும் நீ கொடுத்த வில்லை வாங்கி வளைத்து அம்பைத் தொடுத்து விட்டேன். இந்த அம்பிற்கு இலக்கு எதுவென்று விரைவில் கூறுவாயாகவென்று இராமன் (கூடித்திரியன்) பரசுராமனுக்கு (பிராமணனுக்கு) எதிர் சவால் விட்டான். அது எதிர் சவால் மட்டுமல்ல இராமனது கூற்றில் ஒரு சமரச உடன் பாட்டிற்கான திட்டமும் இருந்தது. “நீ பிராமணன் வேதமறிந்தவன், தவ விரதம் பூண்டவன், உன்னைக் கொல்லலாகாது. ஆயினும் எனது அம்பிற்கு இலக்கு வேண்டும் என்ன சொல்லுகிறாய்” என்று தனது வல்லமையின் பலத்தில் நின்று சமரசம் கோருகிறான். பரசுராமன் பணிந்தான். நான் கொடுத்த வில், உனது பலத்திற்கு ஈடு என்றால் நீதான் அந்தத் “திருமாலாகும்” என்று இராமனைத் திருமாலாக ஏற்றுக் கொண்டுவிட்டான். “பொன்னுடை வனை கழல் பொலங் கொள்தாரினாய், மின்னுடை நேமியான் ஆதல் மெய்மையே என்னுளது லகினுக்கு இடுக்கண்? யான் தந்த உன்னுடைய வில்லும் உன் உரத்துக்கு ஈடென்றால்” பொன்னால் செய்யப் பட்ட அரிய வேலைப்பாடுகள் நிறைந்த அழகு மிக்க வீர கண்டாமணியைத் தரித்தவனும், ஒளி பொருந்திய வல்லமை மிக்கச் சக்கரப்டையைக் கொண்டவனுமான திருமாலே நீதான் என்பது மெய்யாகி விட்டது. இனி உலகினுக்கு எந்தவித மான துன்பமுமில்லை. என்னுடைய இந்த வில்லும் உனது பலத்திற்கு ஈடாகும் என்று கூறி இராமனுடைய அவதாரச் சிறப்பை