பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ыйшей — вәсъ әсрәтини ителә. --гу. Збойәләөйт. 83 வைணவத்திருப்பதிகளிலே திருவேங்கடத்திற்கு முக்கிய இடம் உண்டு. கம்பனுக்குத் திருமால் மீது தனிப் பற்றுண்டு என்பது அவருடைய இராம பக்தி மூலம் வெளிப்படுகிறது. அவருடைய பாடல்களில் திருவேங்கட மலையைப் பற்றிய பாடல்கள் மிக அருமையானவை. அப்பாடல்கள் அவருடைய உள்ளத்தைத் தெளிவாக வெளிப் படுத்தக் கூடியவை அவைகளில் ஒன்று "வடசொற்கும் தென் சொற்கும் வரம்பாகி நான்மறையும் மற்றை நூலும் இடைசெற்ற பொருட் கெல்லாம் எல்லையாய், நல்லறிவுக் கீறாய் வேறு புடை சுற்றும் துணையின்றிப் புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற உடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங் கடத்தில் சென்று ஊர்திர் மாதோ !” என்பதாகும். மனதை நெகிழ வைக்கும் இந்த அருமையான பாடல் கம்பனுடைய கடவுட் கொள்கையை மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்களில் ஒன்றாகும். கம்பன் அதிகமான அளவில் திருமலைதய ஏற்றிப் போற்றிய போதிலும் இதரசமயங்களை அவர் வெறுக்கவில்லை. சமயப் பிணக்குகளையும் சண்டைகளையும் ஏற்கவில்லை. t5F LI]|L| இணக்கமே அவருடைய கொள்கை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. அசோக வனத்தில் சீதையைக் கண்ட அனுமன் அவளுடைய தவத்தைக் கண்டு மெய்சிலிர்த்து வாழ்த்தி வணங்குகிறான். 'வாழி சானகி, வாழி இராகவன் வாழி நான்மறை, வாழியர் அந்தணர்