பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுப்பு பிங்கலந்தை என்னும் நிகண்டில் குகை என்பது முனிவர் இருப்பிடம் என்று கூறப்பெற்றுள்ளது. * பிராமணரல்லாத சைவத்துறவிகள் வாழ்ந்த மடங்கள் குகை எனப்பெறும் ' என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்." இச்சைவத் துறவிகள் விரதம் சீலம் ஞானம் ஆகியவற்றுள் சிறந்திருந்தனர்; நாட்டில் செல்வாக்குப் பெற்று மிக்க மேம்பாடுற்றிருந்தனர். இத்தகைய சீலர் வாழ்ந்த குகைகள் குறித்து ஈண்டுக்காண்பாம். திருஞானசம்பந்தன் குகை திருப்புத்துார்த்தாலுகா சதுர்வேதிமங்கலம் என்ற ஊரில் மூன்ரும் குலோத்துங்கசோழன் காலத்தில் திருஞானசம்பந்தன் குகை என்று ஒரு குகை உருத்திர கோடீசுவரமுடைய நாயனர் திருக்கோயில் தப்பிலா வாசகன் திருமடை விளாகத்தில் இருந்தது. உய்ய கின்ருடுவான் கண்டன் ஆன ஈசான தேவன் என்பவ ரால் இது கட்டப்பெற்றது. இக்குகையில் ஆண்டார் களுக்கு அன்னம் பாலிக்கப் பொன்னமராவதியைச்

  • குமரகுருபரனில் வெளி வந்தது. 1. சாஸ்னத் தமிழ்க்கவிசரிதம், பக்கம் 1 80, அடிக்

குறிப்பு. =I 2. ஆண்டார்கள்- 'அடியார்கள்; பக்தர்கள்’’ S. I. T. I. Pt III, P. 1397.