பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


30 வடநாட்டுப் பிராமணர்கள் விரதம் சீலம் ஞானம் ஆகிய வற்றில் சிறந்த தென்னுட்டுச் சைவத் துறவிகளின் செல் வாக்கையும் மேம்பாட்டையும் குறைப்பதற்கு உண்டு பண்ணியது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனினும் மூன்ரும் குலோத்துங்கனுக்குப் பிறகு பட்டம் பெற்ற மூன்ரும் இராசராசன் ஆட்சியில் சைவத்துறவி களின் குகைகள் மறுபடியும் சிறந்து விளங்கின என்பது கல்வெட்டுக்களால் வெளியாகின்றது.' சில பெரியோர்கள் குகை ஈசுவர சுவாமிகள்: ராசிபுரம் தாலுகா அநந்த கவுண்டன் பாளையத்தில் மின்னக்கல் என்ற ஒரு பாறை யிலுள்ள கல்லெழுத்து குகை ஈசுவரசுவாமியார் என்ற ஒருவர்க்கு நரலோகர்கண்டவங்கி நாரணன் சின்ன நாயக்க நராயன்' என்பார் வெண்ணுந்துார் என்ற ஊரில் அன்னம் பாலிப்புத் தருமம்" நடத்த நிலம் அளித்த செய்தியை விவரிக்கின்றது. கலி 4624 க்குரிய ஒரு செப்பேட்டில் இதுவே பெயருடைய இன்னுெருவர் கூறப்பெறுகிருர். கொங்கு நாட்டு அளயாகிரி என்ற ஊரில் ஒரு மடத்தில் அன்னம் பாலிப்பு நடத்துவதற்காகவும், வழிபாடாற்றவும், கொங்கு 17. திரு. பண்டாரத்தார்.சோழர் வரலாறு-பகுதி 11, பக்கம் 171. 18. 509 of 1929-30. 19. C.P.I. of 1930–31. (§g, பிற்காலத்திய செப் பேடாதல் கூடும்.)