பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


36 என்று ஒரு கல்லெழுத்துப் புகல்கின்றது (S. I. I. Vol. II, Part III, No. 65). இந்நாற்பத்தெண்மரும் சிவதீகூைடி பெற்றுச் சிவபூசை செய்தவராதல் வேண்டும் என்பதை அவர்களது பெயர்களைக் கொண்டே அறியலாம். அப் பெயர்களுட் சில பின்வருமாறு : பாலன் திருவாஞ்சியத்தடிகளான ராஜ ராஜப் பிச்சனை சதாசிவன்; திருவெணுவல் செம்பொற்சோதி யான தகூகிணமேருவிடங்கப்பிச்சனுன ஞானசிவன் ; பட்டாலகன் சீருடைக்கழல் ஆன பூர்வசிவன் ; ஐஞ்னுாற். றுவன் வெண்காடன் ஆன சத்யசிவன் ; அரையன் அணுக்களுன திருமறைக்காடன் ஆன தருமசிவன் ; கூத்தன் மழலைச் சிலம்பான பூர்வசிவன் ; ஐஞ்ஞாற்று வன் திருவாய்மூரான அகோரசிவன்; ஐயாறன் பெண் ணுெர்பாகனை ஹ்ருதய சிவன். இவர்கள் யாவரும் சிவதீகூைடி பெற்றவர் என்பது சதாசிவன் ஞானசிவன் பூர்வசிவன் என்ற தீக்ஷா நாமங் களால் அறியப்பெறும். அன்றியும் அன்னுேர் திருவாஞ் யம், திருவெணுவல் (திருவானேக்கா), திருவெண்காடு, திருமறைக்காடு, திருவாய்மூர், திருவையாறு முதலிய சிவதலங்களினின்றும் போந்தவர் என்பதையும் இப் பெயர்களால் அறியலாம். இப்பெயர்களுள் “செம்பொற் சோதி' என்பது அப்பர் வாக்கு; சீருடைக்கழல்’ என்பது திருவாசகம்: “மழலைச்சிலம்பு’ என்பது திருவிசைப்பா. இனித் தேவாரம் ஒதுங்கால் உடுக்கையும் கொட்டி மத்தளமும் வாசித்தல் அக்கால வழக்கம் போலும். இவற்றை வாசித்தவர்களும் சிவதீகூைடி பெற்றவராகத் திகழ்ந்தனர் என்பதற்கு அவர்கள் பெயர்களே சான்று