பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


48 யனவாகும். இவற்றுள் திருவாய்மொழி விண்ணப்பம் செய்விப்பதற்குச் சோழமன்னர் காலத்துப் பல திருப்பதி களில் நிவந்தங்கள் விடப்பட்டன என்று அறியப்படு: கின்றது. முதல் இராசேந்திர சோழனுடைய 19ஆவது ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று உத்தரமேரூரில் உள்ளது (176 of 1923). உத்தரமேரூரில் மஞ்சிக்கம் ஆன பூமி, 2240 குழி, ஊர்ச் சபையினர் கோயிலுக்கு இறையிலியாக அளித்தனர். இந்நில வருமானத்தை நித்திய பூசைக்கும், பல சிறப்புப் பூசைகளுக்கும் செலவு செய்யவேண்டும் என்றும், இன்னும் 1470 குழி நிலத்தினின்று வரும் வருவாயைக்கொண்டு நாடோறும் இரண்டு காலங்களிலும் மூவர் திருவாய் மொழி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் ஏற்பாடு செய்தார்கள். இனி இவ்விராசேந்திரனுடைய 26 ஆம் ஆட்சி யாண்டில் உத்தரமேரூரிலேயே இராசேந்திர சோழ விண்ணகரத்து வெள்ளே மூர்த்தி ஆழ்வார்க்கு 1520 குழி நிலம் விற்று இறையிலி யாக்கப்பெற்றது; நாடோறும் 7 குறுணி நெல் மூவர் திருவாய்மொழி விண்ணப்பம் செய்யக் கொடுக்கப் பெற்றது. இங்ங்னம் ஒரு சாஸ்னம் (194 of 1923) குறிப்பிடுகிறது. இனி இவ் இராசேந்திர சோழனின் (ஆட்சியாண்டு குறிப்பிடப் பெருத) எண்ணுயிரம் என்னும் ஊர்க் கல் வெட்டொன்று (333 of 1917) திருவாய்மொழி விண் ணப்பித்தற்கும், வேதம் வியாகரணம் மீமாம்சை ஆகிய _ 3. மஞ்சிக்கம்-தரிசுநிலம்.