பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ ருத்ராத்யயனம் உருத்திரன் 'உருத்திரன் என்னும் நாமம் செந்தீப்பண்ணவன் தனக்கும் ஆமால்' என்றமையால் (கந்தபுராணம், ததீசிப் படலம், 45) படைத்துக் காத்து அழித்து மறைத் தளிக்கும் சிவபெருமானையே உருத்திரன் என்ற சொல் குறிக்கும். உருத்திரன் என்பது அசுரர்களை அழச் செய்கிறவன், எல்லாவுயிர்களிடத்தும் உள்ள துன்பங் களைப் போக்குபவன், அழுகையைப் போக்குகின்றவன், மறையாகிய ஒலியை ஊழிக் காலத்தில் முதலில் பிரம னுக்கு அருளியவன், நாதத்தால் உலகை இன்புறச் செய் கின்றவன், மறையால் அல்லது ஓங்காரத்தால் வேண்டிய வற்றை அளிக்கின்றவன், துன்ப காரணத்தைப் போக்கு கின்றவன்-என்று பல பொருள்படும். 'இன்பம் செய்தலின் சங்கரன்; எம்பிரான் இன்பம் ஆக்கலின் சம்பு; இடும்பைநோய் என்ப தோட்டும் இயல்பின் உருத்திரன்' என்று காஞ்சிப்புராணத்தில் சிவஞான முனிவரும் அருளியுள்ளார். 'இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கு நீரால் உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்ருன்' ான்பது கந்தபுராணம்.

  • திருக்கோயிலில் வெளிவந்தது.