பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


67 பெற்றுச் சென்ஜன, திருவொற்றியூரான் அடிமை என்னும் திரு. த. ப. இராமசாமிப் பிள்ளையவர்களால் தமது சொந்தப் பொருட் செலவில் பதிப்பித்து நன்கொடையாக அளிக்கப்பெற்ற திருநான்மறை உருத்திரத்திரட்டு ' என்ற 167 பக்கமுள்ள நூலுள் கண்டவற்றினின்று வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளப்பெற்றன. அந் நூலே யான் படித்து இன்புற்றேன் ; யான் பெற்ற இன் பம் பெறுக இவ்வையகம்' என்று கருதி, அந்நூல் பகுதிகளுள் ஈண்டைக்கு ஏற்பனவற்றை மட்டும் எடுத் துக்கொண்டிருக்கிறேன். அம்மொழி பெயர்ப்பாசிரியருக் கும், பதிப்பாளர் அவர்களுக்கும் எளியேன் மிகவும் கடமைப்பட்டவனுவேன். உருத்திரப் பெயருடையார் முன்னரும் பின்னரும் கடியலூர் உருத்திரங் கண்ணனர் : இவர் சங்கப் புலவருள் ஒருவர். கடியலூர் என்பது பாண்டி நாட்டின் கண்ணதோரூர். பத்துப்பாட்டுள் கண்ட பெரும்பானுற் றுப் படையும் பட்டினப்பாலேயும் இவர் பாடியனவே ஆகும். கண்ணன் என்ற இயற் பெயருடைய இவர், உருத்திரப் பெயரும் கொண்டுள்ளார். இவர் பெயரும் உருத்திரன் என்று இன்றி, உருத்திரம் என்றிருத்தலால், பூரீ ருத்திரத்தை ஒட்டியே இவர் பெயர் அமைந்திருத்தல் கூடும் என்னலாம். இவர் பாடியவை குறுந்தொகை 352 முதலியன. - உருத்திரளுர் : இவரும் சங்க காலப் புலவருள் ஒருவர். இவர் பாடியவற்றுள் ஒன்று குறுந்தொகை 274. சோழன் நல்லுருத்திரன் : இவர் கலித் தொகையுள் முல்லைக்கலி பாடியவர்; இவர் பாடியது புறம் 190.