பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


90 இதில் சிவபெருமானுக்குரிய ஆணையாகத் திருவிரை யாக்கலி என்பது காணப்பெறுகின்றது. நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி 68 ஆம் செய்யுள் கோட்புலி நாயனுரைப் பற்றியது. அது வருமாறு : ' பெற்ற முயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர் தமது சுற்ற மறுக்குந் தொழிற்றிரு நாட்டியத் தான்குடிக்கோன் குற்ற மறுக்குநங் கோட்புலி நாவற் குரிசிலருள் பெற்ற வருட்கட லென்றுல கேத்தும் பெருந்தகையே.’’ இதினின்றும் திருவிரையாக்கலி என்பது சிவபெரு மான் ஆணை என்பது போதரும். நாதன்றன் வல்லான (12 ஆம் திருமுறை) திருவிரையாக்கலி என்னும் ஆணையிட்டவர் கோட் புலி நாயனர். இவர் சோழநாட்டில் திருநாட்டியத்தான் குடி என்னும் ஊரவர். இவர் ஒரு பெருவீரர்; சிவ. பெருமான் கோயில்கடோறும் அமுதுபடி பெருகச் செய் யும் கடப்பாடு கொண்டவர் ; அதற்கென நிறைய நெல் சேமித்து வைப்பவர். ஒருகால் வேந்தனேவல்ால் இவர் போர்மேற் செல்ல வேண்டியதாயிற்று ; செல்லுங்கால் தமராயினுரைத் தனித்தனியே விளித்து, எந்தையார்க் கமுதுபடிக் கேற்றியநெல் இவை அழிக்கச் சிந்தையாற் ருனிகனவார் திருவிரையாக் கலி' என்று ஆணையிட்டு அகன்ருர். இவர் போர் மேற் சென்றபின் கடும்வற்கடம் வந்தது ; கோட்புலியாரின் உறவாவார் யாவரும் பசியால் நலிவுற்றனர் ; ' இறைவற்குரிய நெல். லிது ; தொடற்க : திருவிரையாக்கலி ' என்று கோட்.