பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


95 கல்லெழுத்துக்களில் " தேர்போல்" என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி, பாண்டிய அரசருள் ஒருவராகிய குலசேகரபாண்டிய னுடையதாகும். குலசேகரபாண்டியன் கி.பி. 1268 முதல் கி. பி. 1311 வரையில் அரசாண்டவன் ; இவ்வரசன் எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவரின் மகனுவன். இவனும் எம்மண்டலமும் கொண் டருளிய' என்ற சிறப்புப் பெயர் பூண்டவன். இவனது 10 ஆவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்துத் திருவானேக் காவில் உள்ளது. இக்கல்வெட்டு ஒரு நிலவிலேப் பிரமான இசைவுத் தீட்டு. இதில் கையொப்பமிட்டவர் களுள் ஒருவன், கோயில் கணக்கு சிற்ருமூர் உடையார் ஆரம்பூண்டான் திருவானைக்காப்பிரியன் ' ஆவன். என்பவன் ஷெ கோயிலில் போசள வீரராமநாதனது கல்வெட் டொன்று காணப்பெறுகின்றது. வீரராமநாதன், எம் மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியனுக்குக் கப்பஞ்செலுத்திக்கொண்டு சோணுட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தவனுவான். இக்கல்வெட்டும் ஒரு நில விலைப்பிரமான இசைவுத் தீட்டு. இதில் கையொப்பம் இட்டவர்களுள் ஒருவன், கோயிற் கணக்கு சிற்றம்ப ருடையாரான ஆரம்பூண்டான் திருவானைக்காப்பிரியன்’ என்பவனுவன். * 1. S. I. I. Vol IV No. 426; A. R. No. 25 of 1891. 2. S. I. I. Vol IV. No. 427; A. R. No. 26 of 1891. 3. திரு, ச. பண்டாரத்தார் - பாண்டியர் வ ர ல | று, பக்கம் 131.