பக்கம்:கல்வி எனும் கண்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கல்வி எனும் கண்


அத்துணை வகையில் சிறந்ததாக இல்லை. தமிழ் நாட்டில் அத்தகைய பல்கலைக் கழகத்தில் பயின்று உயர்ந்த நிலையில் சிறப்புநிலை-முதல் நிலையில் பட்டம் பெற்றவராயினும் அவர்களைக் கல்லூரி ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது என்று, தமிழ் நாட்டிலேயே மற்றொரு பல்கலைக் கழகம் ஆணையிடுகிறது. இது எவ்வளவு கேவலம் என எண்ணிப் பார்ப்பதில்லை: ஒரே மானியக் குழுவின் கீழ், ஒரே அரசரின் .(Chancellor – Governor) கீழ் இயங்கும் ஒரு பல்கலைக் கழகத்தை மற்றொரு கழகம் மதிப்பதில்லை என்பது வெட்கக் கேடு அல்லவா! அதே வேளையில் அவ்வாறு மதிக்காத பல்கலைக் கழகத்தே கடலனைய குறைகள் மலிந்துள்ளதை அவர்கள் உணர்வதில்லை. இயேசுநாதர் கூறிய ‘உன் கண்ணி லிருக்கிற உத்தரத்தை எடுத்துப் போட்டு மற்றவன் கண்ணிலிருக்கும் துரும்பைப் பற்றிக் கருது’ என்று கூறிய நீதி இங்கு என் நினைவுக்கு வருகிறது.

அதே வேளையில் தன் கீழ் உள்ள தனக்கு வேண்டிய சில கல்லூரிகளுக்குத் தன்னாட்சி உரிமை வழங்கி, அவற்றுள் பல மனம் போனபோக்கில் செயல் இயற்றுவதையும் தேர்வு நடத்துவதையும் கண்டு கொள்ளாமல் பட்டம் வழங்கும் ஒரு பல்கலைக் கழகத்தைப் பற்றி அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை. அண்மையில் அத்தகைய தன்னாட்சிக் கல்லூரிகளைப் பற்றி ஆராயவும், தேவையாயின் அவற்றைப் பழைய முறையில் பல்கலைக் கழகத்தோடு இணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் போவ்தாக அறிகிறேன். இன்று தமிழ்நாட்டில் அத்தகைய கல்லூரி ஒன்றின் செயல்பாட்டினால் பல இன்னல்கள் உண்டானதை நாளேடுகள் காட்டுகின்றன. அரசாங்கம் விரைந்து இத்தகைய செயல்களைத்திருத்த நலன் காணச் செயல்பட்டால் நாட்டுக்கும் நல்லது; அதற்கும் நல்லது:

தேர்வு முறை பற்றியும் முன்பே சில குறிப்பிட்டேன். இங்கே ஒன்றை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். தேர்வுகளை