பக்கம்:கள்வர் தலைவன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f4 கள்வர் கல்வன் (அங்கம்-1 வீனகிவிடும். ஏமாங்கதன் இறந்தான் என்று என் செவியினல் நான் கேட்குமளவும் எனக்கு இரவெல்லாம் பகல்தான் ! இதைக் கேட்டபின்பே கான்மேல் நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி யோசிக்கவேண்டும். கதவின் பக்கமாய் காஞ்சேயன் வந்து கிற்கிருன். செளரி. காஞ்சேயா, விடங்கனெங்கே ? கா. அவனைக் காலேமுதல் காணுேம். அரசே, தம்முடன் கண்டு பேசுவதற்காக செள மாலினிதேவியும் பாலசூரிய ரும் வெளி வாயிலில் வந்து நிற்கிரு.ர்கள். செளரி. உள்ளே வரச்சொல். இதென்ன சங்கடம் ! (விரை வில் மேஜையைப் பூட்டிவிட்டு தன் ஆசனத்திற்கு வருகிருன்.) கான் மிகவும் வருத்த முற்றவனேப்போல் வேஷம்போட வேண்டும். நான் மேற்கொண்ட வேலை என்னை ஒவ் வொன்ரு செய்யச்சொல்கின்றது ! பாலசூரியன் செளமாலினியை அழைத்து வருகிருன். செளரி. அம்மணி ! தாங்கள் ஏது இவ்வளவு பிரயாசம் எடுத் துக் கொண்டிங்கு வந்தது ? அப்படி என்னுடன் ஏதா வது பேசவேண்டியிருந்தால் எனக்கொரு வார்த்தை சொல்லியனுப்பினால் ாேன் தங்களிடம் வரக்காத்துக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்ததற்காக என்னை மன்னிக்கவேண்டும். என்ன சமாசாரம் : பாலசூரியா, என்ன சமாசாரம் ? பா. என்ன சமாசாரம் : -நான் பிரயோஜனமில்லை என்று எவ்வளவு தடுத்தும் கேளாது என் பிதாவைப் பற்றி உம்மிடம் பேச என் அன்னே வந்திருக்கிரு.ர்கள். செளமா. ராஜகுமாரா ! இடுக்கனுற்ற காலேயில்உ தவுவாரே உற்ருரெனப்படுவார் இந்த சந்தர்ப்பத்தில் எமக்குதவு வார் உம்மையன்றி வேறு ஒருவருமில்லை. உம்மாலேயே எங்கள் குறைகள் தீர்க்கப்படவேண்டும். அப்பா ! உமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை, என் பிராணநாதர் ஒரு அபராதமும் நினேத்தவரல்லவென்பது நீர் அறியாத விஷயமல்ல. மாமா அவர்கள் விணுக அவர் மீது கோபம் கொண்டு இக் காட்டை விட்டுப் போம்படி கொடுமை யான கட்டளையிட்டிருக்கின்றது ர்ே அறிந்த விஷயமே தாம் எப்படியாவது மாமா அவர்களிடம் சொல்லி இக் கடுரமான கட்டளையை மீட்டுக்கொள்ளும்படிச் செய்து என்பர்த்தாவுடன் என்னைச் சேர்ப்பிப்பது தம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/18&oldid=779721" இலிருந்து மீள்விக்கப்பட்டது