பக்கம்:கள்வர் தலைவன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஜெ. கு. கள்வர் தலைவன் (அங்கம்.1 வராகன் பெறும்படியான ஒரு கெம்புமோதிரம் போட் டுக்கொண்டிருந்தேனே தங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா, இந்தபொன் மோதிரம் இருக்குமிடத்தில் ? ஆமாம் ஞாபகமிருக்கின்றது-பிரபுவுக்கு என்ன வலி என்று கூறினிர்? இருந்திருந்து கையில் ஒரு விதமானவலி யொன்றுண்டா கின்றதாம்-உமக்குமாத்திரம் ஒருசமாசாரம் கூறு கிறேன் அதை ஒருவரிடமும் கூறவேணடாம். அந்த மோதிரத்தை ஒருநாள் இரவு ஒருவருமறியாதபடி மகா ராஜா என் வீட்டிற்கு வந்து மிகவும் வேண்டிக்கொண் டார். அவர் என்ன அதற்கு விலை கொடுக்கப் போகின் முரா என்று தானமாகக் கொடுத்துவிட்டேன். மிகவும் சந்தோஷம்!-எந்தக்கையில் கோகின்றதாம் ? வலதுகையில். அப்புறம்-என்ன ஆச்சரியப்படு கின் நீர் என் கையில் நான் அப்பொழுது போட்டுக்கொண் டிருந்த காப்பும் கொலுசும் எங்கே காளுேமே என்று யோசிக்கின்றீரோ அதைச் சென்ற பொங்கல் பண்டி கையில் என்னுடைய அம்பட்டனுக்குக் கொடுத்து விட்டேன். - அப்படித்தான் செய்யவேண்டும். மகாப்பிரபு, தமக் கென்ன குறைவு.!-இவருக்கு என்றுமுதல் இக்கோ யுண்டாயிருக்கின்றது? இரண்டுதினங்களாக இருக்கின்றதாம்-அதிருக்கட்டும் தங்களே நான் ஒருஜோசியம் கேட்கவேண்டும். பத்து வருடத்துக்கு முன் ஒருஜோசியர் சீக்கிரம் எனக்கு எண் பதுகோடி பொன் புதையலில் கிடைக்கும் என்று கூறி விட்டுப்போர்ை. இதைச் சொன்னதற்காக அவருக்கு நான் ஆயிரம் பொன்கொடுத்தேன். அந்தப் புதையல் எனக்கு எங்கேகிடைக்கு மென்று தாங்கள் ஜோசியம் பார்த்துச் சொல்லவேண்டும். உமக்கும் ஏதாவது தருகிறேன். ஜ. இவ்வளவு சீக்கிரத்தில் கூறமுடியுமா? நான் தங்களு டைய கிர்கத்திற்கு நாளேத்தினம் காலவருகின்றேன், அப்பொழுது எல்லாம் பார்த்துக் கூறுகின்றேன். ஆம்! அதுதான் சரி, நான்வருகின்றேன் மறக்கவேண் டாம், என்மாளிகை தெரியுமே உமக்கு ? பக்கத்து வீதியில் வாசற்படி இடிந்தவீடு நம்முடையது. பாருங் கள் ! காம் எத்தனே முறை அதைச் சரிப்படுத்தியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/26&oldid=779729" இலிருந்து மீள்விக்கப்பட்டது