பக்கம்:கள்வர் தலைவன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கள்வர் தலைவன் (அங்கம்-1 ஏ. ஆம். அதெல்லாம் சரிதான். அந்த முத்திரை உனக் கென்னத்திற்கு? அதை எடுத்துவர முடியாது, ஒருவரு மெடுக்காதபடி அது இருக்குமிடத்தில் பதிப்பிக்கப்பட் டிருக்கின்றதே ? . ஜெ. அரசே, கான் கூறுவதற்கொன்றும் நியாயம் கேட்கலா காதென்று கூறினதை மறந்தீரோ அதிருக்கட்டும்ஆனல் அந்த முத்திரையை எடுத்துவர முடியாதா ? ஏ. முடியாது. - ஜெ. பெரிதன்று, உம்மிடம் இரண்டுவெறும் ஒலைகளைத் தரு கின்றேன். அதன் அடியில் அம்முத்திரையை பதித்துக் கொண்டு வரவேண்டும், ஜாக்கிரதை இதை ஒருவருமறி யாதபடி செய்யவேண்டும். யாராவது பார்த்துவிட்டால் எல்லாம் கெட்டது. அரசே, தாம்போய் திரும்பிவருமள வும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும், உமது செய்கை யால் ஒருவேளை யாராவது கண்டு பிடித்துவிட்டால்:ஏ. அப்பர். கான் மிகவும் ஜாக்கிரதையாயிருப்பேன். பயப் டடாதே. - ஜெ. எப்படியிருக்குமோ? நம்மாலான அளவு ஜாக்கிரதையா யிருக்கவேண்டும் சாம். ஐயனே, நமது கள்வர்களே அழையும். ஜெ. சொல்லுகின்றேன் அழையும். - - - - - (ஏமாங்கதன் தாரையெடுத்துாத, கள்வரெல்லோரும் வந்து சேர்கின் முர்கள்) , . . . . . நமது கள்வருதவி நமக்கிருக்குமளவும் பயமில்லை - அடே நாயனர் நீங்களெல்லோரும் நாளைத்தினம் காலே புஷ்பபுரத்துக் கடைத்தெருவில் வெவ்வேருக மாறு வேடம் பூண்டுவந்து சேர்ந்திருக்க வேண்டும். இதற்கு வேண்டிய காரியங்களையெல்லாம் நீ பார்த்து இவைகள் யெல்லாம் அங்கு ஜாக்கிரதையாயிருக்கும்படி செய். மிகவும் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும் நான் அங்குவரு வேன்.போய் சித்தம் செய்யுங்கள் சீக்கிரம். எல். அப்படியே சாமி. (போகிருர்கள்) - - - - - ஜெ. ஐயனே, அரண்மனையில் தாம் கடந்து கொள்ளவேண்டி யதைப்பற்றி நான் உமக்கு இன்னும் சில சமாசாரங்கள் கூறவேண்டும், வாரும் சொல்லுகின்றேன், குரபாலக் கோட்டைக்குள் போவோம். - ஏ. அப்பா ! இப்பொழுதாவது சொல்லமாட்டாயா ே யாரென்று ? - ஜெ, ஐயா, நான் சொல்வதைத் தெரிந்துகொள்ளும் அத்ற்கு மேல் போகாதீர். (இருவரும்போகிருர்கள்) குளும் அதறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/40&oldid=779745" இலிருந்து மீள்விக்கப்பட்டது