பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 2. @rr. rrr

தஸ்தாவேஜ் ரீதியா. உங்களுக்குத் தெரியாதா? இங்கே மாத்திரம் இல்லை. நான் வேலை செய்த மற்ற இடங்: களிலும் பார்த்தேன். ஒரு கட்டத்துக்குப் பின் பதினெட்டு யானை கட்டி இருந்தாலும் இவர்களுக்கு வயது நகர்வதே. இல்லை. ஜாதகம், கீதகம், வயது ருசுவுக்கு எழுத்தில் ஒண்னும் கிடையாது. இருந்தாலும் கிழித்துப் போட்டு விடுவான்கள் தோற்றம் பார்த்து வயதின் குத்து மதிப்பீடு. டாக்டர் சர்டிபிகேட், கேட்கவே வேண்டாம். அவங்க கிழிச்சுப் போட்ட எழுத்து ருசுத் துண்டுகள் எங்கானும் கிடக்கும். அதைத் தேடிப் பிடிச்சு சுக்கல்களை நீங்கள் ஒட்ட வைக்கப் பார்த்தால், மறுநாள் கழனிக் கட்டில் நீங்கள் துண்டு துண்டாய், உங்கள் சீட்டும் கிழிந்து கிடப்பீர்கள். இவர்கள் எல்லோரும் தேவர்கள். இந்த ரீதியில், இதே முத்தையா, ஒரு நாள் வாடி வதங்கி, ஒடுங்கி, முறையாக அவன் வேலையில் காலமானாலும் அவனுடைய ஆபீஸ் ஏட்டில், அவன் வயது மட்டும் வாடாமல்லியாக விளங்கிக் கொண் டிருக்கும். குடும்பத்துக்கு நிதி திரட்டலாம். கடுஞ்சாவுக்கு பையனுக்கு வேலை ஸ்தாபனத்திலேயே கொடுக்க வேண்டும் என்று கருணை மனு போடலாம், அதை யூனியன் உரிமை பிரச்னை ஆக்கி விடும். எண்ணமும் அதுதானே! பையனுக்கு என்ன கன்னத்தில் வெட்டுக் காயம், புதுசாக் கூடத் தோணுது?’

“அழகு வடுங்க- எனக்குப் பீறிட்ட சிரிப்பை, முத்தையாவின் தயக்கமற்ற பதில் தந்த திணறல், வியப்பு அடக்கி விட்டன.

அடித்தரி சக்கை அப்படி ஒண்னு இருக்கா என்ன? அழகு மச்சம் மாதிரியாக்கும்; சோடா புட்டித் தண்டால் கீறிக் கொண்டானா?”

இன்ஸ்பெக்டர். கைக் கடியாரத்தைப் பார்த்துக் கொண்டார். “நேரமாச்சு, காஷ் திறப்போமா?"