பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 107

தான். ஆனால் அவர் இங்கே வேண் டாம். அவர் டேபிள்லே வெச்சுடு”

காசியங்கள் நடக்கின்றன.

அன்றன்றைய முடிவில் நிற்கும் நிகரம் சொல்ப மானாலும்,இந்தப்பாவி போட்டுஎடுப்பதில் பஞ்சமில்லை. ஆறு மாசக் கடன்காரன் கணக்கு. அனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே போகிறதே, சொன்னபடி இன்னிக்கே முடியுமா ?

முத்தையா விசுவத்துடன் காஷ்கூண்டில் உட்கார்ந்து கொண்டு நோட்டைக் கட்டுத்தைக்கிறான்.

‘Mr. மானேஜர், இன்னிக்கு எண்ணிமுடியாது போல இருக்கே ஒத்தையே இன்னும் எண்ணிமுடியவில்லை. gel g6uastaf heary cash baiance?”

‘உங்களுடைய குற்றப் பத்திரிகைக்கு இன்னொரு item on 4-35, Congratulate you. 1335 state Bank அவ்வளவு ஒப்புறவு. வாரத்துக்கு ஒருநாள், 6000 piecesக்கு மேலே வாங்க மாட்டான்களாம். ஜனங்கள். பாதிக்குமேலே விவசாயிகள், காசை எண்ணிக் கணக்கில் கட்டறதுக்கு அவனுக்கு உசிரே பிரிஞ்சுபோற மாதிரி, தொட்டுத்தடவிப்பாக்கறதுலே அவன் காணற சந்தோஷம் அவனுக்குக் கணக்கில் கட்டறதில் இல்லை. பச்சை நோட்டுலே அவனுக்கு எங்கே லேலா தேவி நடக்கும் ?”

‘’But idle cash!”

‘அதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேனே! ரூல பேசலாம், ஆனால் அத்தனையும் ஏட்டுச்சுரைக்காய். field க்கு வந்தால் எல்லாம் எதிர்மறை. இன்னும் கேட்டால், நடைமுறையில் நடக்கக் கூடியதுதான் ரூலும் &al-, Bank bible gio Practicability gio g05agstrui. அப்பப்போ, மதறாஸுக்கோ, பக்கத்துக்கு ப்ராஞ்சுக்கோ, சொந்தக்காரியமாவோ ஆ. பி ஸ் வேலையாவோ