பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 5

‘'நீ இப்போ பதவியில் இருகாய்னு கேள்விப்பட்டேன். எனக்கு எழுத வறதுங்கறதே ஆச்சரியமாயிருக்கா? என்னை என்னன்னு நெனச்சுண்டிருக்கே? ரொம்ப சந்தோஷம். எங்கேனும் ஆயுசோட நன்னாயிருந்தால் சரி. காமுப்பாட்டி வளர்த்த கை வீணாகல்லே. என் வீட்டு மருதாணிமரம் இடிவிழுந்து பட்டுப் போனவரைக்கும் அப்பப்போ பறிச்சு, என்கையாலேயே அரைச்சு, விழுதை உருட்டி. மரச்சீப்பில் வெச்சுண்டு. நீ எனக்குப் பிள்ளைக் குப் பிள்ளையா, பொண்ணுக்குப் பொண்ணா, உனக்கு இட்டதை, நான் இப்போ நினைவுபடுத்தி, நினைப்பு வந்தால் சரி. நான் இட்ட ராசி இன்னும் உன் உள்ளங் கையில் லக்டிமி பட்டா மின்னிண்டு விளையாடறாள். நீ பாங்கு மானேஜராமே, போடுசக்கை. அத்தனை பனமும் நீ தானே புழங்குவாய்? உனக்கு நான் உறவு இல்லே. ஆனால் நான் வளர்த்த பிள்ளைதானே! இருக்கறதைப் போட்டுத் தானே வளக்கமுடியும்? குலோப் ஜாமுக்கும் கோவாவுக்கும் குல்கந்துக்கும் கோகுலத்துக்கு நான் எங்கே போறது ? ஆஞ்சு பாத்தா அது வெறும் மைதாவும் பாலும்தான். பேருதான் பெத்தபேரு. நான்போட்ட பழையதையும், பழங்குழம்பையும் காஞ்ச கொளஞ்சிக் காயும் சாப்பிட்டு உருவாகித்தான் நீ இப்போ வாயிலே பேர் நுழையாத விதவிதப் பண்டங்கள், பகrணங்கள் சாப்பிட்டிண்டுருக்கே. நீ சாப்பிடறதெல்லாம் எனக்கு வேண்டாம். யாருக்கு இந்த அனுசாரத் திண்டியெல்லாம் வேண்டிக் கிடக்கு: ஒரு முறுக்கு, சீடை, தட்டை காலில் கட்டி அடிக்கக் காணுமா? தித்திப்பை எடுத்துண்டா ஒக்காரை, திரட்டுப் பால், அதிர்சம், பொருவிளாங்கா உருண்டை-தின்காட்டா என்ன? சொன்னாலை வாயில் தேன் சொட்டல்லே?

-சரி சரி இப்போ நான் உன்னோடே பகrணக் கடை பேசவரல்லே, போனவருசமே ஒரு நூறுரூவா கேட்டு எழுதியிருந்தேனே என்னாச்சு? யோசனைபண்ணினையா?