பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா. ச. ரா.

வந்து முடிந்திருக்கிறது. எனக்கு இனி விமோசனம் இல்லை. எனக்குச் சில சமயங்களில் தோன்றுவதுண்டு. ‘அட, வயிறு நிரம்ப, வாய் நிறையச் சாப்பிட வழி யில்லாமல்- எல்லா வசதிகளும் இருந்தும்- இவ்வளவு பெரிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு உத்யோகம் பண்ணித்தான் ஆகணுமா? கட்டு திட்டமாயிருந்தால் தான் உடம்போடு உயிர் ஒட்டி வாழ முடியும் என்றிருந்தால் என் செய்வது? மனம் மாற்ற இந்த உத்தியோகமும் இல்லாவிட்டால், <}, {{{ & !, fr சாப்பாட்டு விதங்களை நினைத்துப் புழு ங் கி யே பைத்தியம் பிடித்துவிடும்- ஏ பாலா, பருப்புத் துவையல் வாசனை தூக்கறதே, ஒரு ஸ்பூன் ஸான்க்ஷன்?- என்னடி தலையை ஆட்டறே, மாட்டையா? ஒரே ஒரு ஸ்பூன், போடறியா, நானே எடுத்துக்கட்டுமா?- Oh thanks? good girl பார்த்தையா அம்பி, இப்படிப் பத்தியம் பிசகிப் போறதனால்தான், உடனே அதன் பல்னையும் அனுபவிக்கிறேன். ஒ ஒரு ஸ்பூன்தான், ஆனால் இது. என்னை விடாது, எனக்குத் தெரியும். இருக்கிற வரைக்கும் இப்படித்தான் இழுபறி. இந்தச் சபலம்னு ஒண்னு இருக்கே மானங்கெட்ட பிழைப்பு. பெரிய ஆசைகள், சவால்கள். ஃபட், நானோ அதுவோ. எதுவோ ஒண்னுக்கு ஜெயிப்பு. தோத்தால் அத்தோடு க்ளோஸ். இரண்டு பல்லிகளோ, முதலைகளோ, ஒன்றை யொன்று வயிற்றைக் கவ்விக் கொண்டு சண்டை போடுகிற மாதிரி. சாவு வரை சண்டை. ஆனால் சபலங்கள், சின்னத்தனங்கள், உண்மையில் மனிதனை அழிப்பவை இவைதான். பேன், மூட்டைப் பூச்சி மாதிரி. சிறுகச் சிறுகக் கடித்து ரத்தத்தையே குடித்து... இன்று இன்ஸ்பெக்டர் சீரழிஞ்சு போனதே இந்தச் சபலம் காரணம் தானே! இந்த ஆயிரத்தைத் திருடி அந்த மனுஷனுக்கு ஆக வேண்டியது ஒண்னுமில்லே. இருந்தும் சமயமும் சபலமும் சேர்ந்து நாய்ப் புத்தி ஆக்கி விடறது. அம்பி, ஒரு தினுசில் உனக்கு நான் Thanks சொல்லனும்;