பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 @r r fr.

இன்ன ஐயாவைக் கேக்கறேன், ருசி எப்படி? இந்த மரத்தை ஐயாவுக்குன்னே ஒதுக்கிட்டேன். இந்தக் கிணத்துப் பாய்ச்சலில் முதலில் விருத்தியானது இந்த மரம்தான். மூணே வருசத்துலே குலை தள்ளிடுச்சு. நான் எப்டின்னு பார்த்ததில்லை. வேண்டுதலை மாதிரி இது ஐயாவுக்கு மட்டும்தான். எசக்கி, டைவர் ஐயாவுக்கு அடுத்த மரத்துலே ஏறிப் பறிச்சு சீவிக் கொடு, எசக்கி, ப்ளஷர்லே ஒரு டஜன் ஐயா வீட்டுக்கு அடுக்கு!’

மானேஜர் தடுத்து விட்டார். ‘வூட்டுலே குளந்தைங்க பிரியமா சாப்பிடுங்க.” “நாயக்கர்வான், வீட்டு சமாச்சாரம் உங்களுக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம். நான் இங்கே தின்கறது, குடிக்கறதெல்லாம் தி ரு ட் டு த் த ைம். நாயக்கரே, வீட்டுக்குக் கலகமே வேண்டாம். என் உடம்புக்காக வீட்டிலே அவ்வளவு உஷாராயிருக்காங்க. நான்தான் வெளியில் வந்தால் நாக்கை அடக்க முடியாமல் சறுக்கி விழுகிறேன். அப்பா, அக்கா மகனே, அசதி மறதியாக்கூட நீ வீட்டில் ஏதேனும் திருவாய் மலர்ந்துடாதே.”

வரப்பின்மேல் இருவரும் நடக்கிறோம். வரப்பு குறுகலாய் ஒற்றையடிப் பாதையாக இல்லை, பக்கத்தில் பக்கத்தில் இருவரைக் கொண்டது, கொஞ்சம் சிரமத் துடன், .

“சின்ன ஐயா கிட்ட சொல்லுதேன். அடியிலே ரெண்டரை அடிக் குழாய் போவுது. ஒரு பர்லாங்கு வரைக்கும் போய் மேட்டுக்குப் பாயுது. குழாயை மக்கள் கண் சுடவேணாம்னு செலவானாலும் போவுதுன்னு மேலே சொந்தமா ஒரு சின்ன ரோட்டையே போட்டுட் டேன், எப்பிடி?’’

எப்படியென்ன? ரோட்டு வளைவில் நடக்க நடக்கக் கிரிப்ரதrணம் போல் இருக்கிறது. எட்ட எட்ட,