பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு #?

வான், எங்கே முடியும் தெரியாது. ஆனால் சும்மா மட்டும் இருக்க முடியாது. ஏதாட்டும் செஞ்சுகிட்டே யிருக்கணும். ஆண்டவனே நீ தான் கதி, விவசாயி லாப நஷ்டம் கணக்குப் பாக்கவே முடியாது. பெண் ஜாதி தாலி சேட்டு கிட்டயிருக்கும். அக்கா ஒரு கலியாணத் துக்குப் போவணும்னு மச்சினிச்சி கிட்டே ஒரு நாளைக்குன்னு சொல்லி அவ நகையைக் கடன் வாங்கி அதையும் மார் வாடி கிட்டே வெச்சிட்டு குடும்பமா அன்னி ராத்திரி குசாலா டெண்டு சினிமாவிலே அரிச்சந்தர விலாசம் பார்ப்பான். நெல் விலை விளுந்து பல் கொட்டிக்கும்.

மிளகா விலை துக்கி கை கொடுக்கும். அப்போவானும் கணக்கிலே ஏதாச்சும் படுமா? ஒட்டைப் பானையிலே எம்மாங் கொட்டியும் என்ன கொ ட்டி யு ம் நிறைவா காணறதெப்போ ? பயிர் சாவியாவதைப் பார் த் து க் கிட்டேயிருக்க முடியுமா ? அ ன் ைட வ யி லி ல் நடு ராத்திரியிலே போய் கள்ளக்கமல் இரைச்சு வரப்பு வெட்டி த ண் ணி யை மாத்திப் பயிருக்கு ஊட்ட வேண்டியதுதான். அடுத்த நாள் மாட்டிக்கிட்டா திண்ணைப் பஞ்சாயத்துத் தீர்ப்பு. அபராதம் செலுத்து வானோ- அபராதத்துக்கு அவன் எங்கே போவான். முருங்கை மரத்துலே கட்டி அணைகயிறிலே பத்துப் பதி னைஞ்சு-ஒண்னு ரெண்டுன்னு எண்ணி எண்ணி அங் கேயே முதுகிலே தோல் கிழிஞ்சுக்கும், பெண்சாதி புதுஸ்ஸா, அளகாயிருந்தா-சின்ன ஐயா கிட்டே தப்பு பேசுதேனோ?-அனுப்பிவைக்கலாம். அவள் மாட்டேன்னா அவளை வெட்டிக் கிணத்துலே போட்டு, தண்ணியிலே ஏத்தினால் நிம்மதியா போயிட்டு வத்திடுவான். மானம் பாத்தவன் புழக்கடையிலே எண்ணிக்கும் எருப்பள்ளத்துக் கப்பாலே விஷப் பூண்டு இருக்குது கொளந்தை குட்டி குடும்பத்தோட, பரமபத சோபான படம் பெரிய ஏணி ஏறிட்டா அப்புறம் என்ன ஆச்சு எவன்பார்த்தான்? ஐயா