பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு சிவராமன், இன்னும் பிளிபேளாவிலிருந்தே மீள வில்லை. இலையில் ஒரு பக்கம் தேங்காய் சாதம் பப்படத் தைப் போர்த்திக்கொண்டு. உட்கார்ந்திருக்கிறது.

“ஒய் ராயரே, நீர் நல்லவரில்லை. சாப்பிடவும் முடிய வில்லை. விடவும் முடியவில்லை’

“எல்லாம் அண்ணா தயவு, ஆசிர்வாதம்”

அன்றைய சமையல் விவரங்கள் என்ன தீர்க்கமாக மனதில் பதிந்து இப்போது 3- Dயில் பிதுங்குகின்றன!

“எங்கேய்யா இத்தனை வித்தையையும் அடக்கி வெச்சிண்டிருந்தீர் ?”

‘எல்லாம் அண்ணா ஆசிர்வாதம்தான். ஸாரை விட்டால் இங்கே இதையெல்லாம் ரஸிக்கக் கி.ட மனுஷாள் கிடையாது! கத்துண்டது மறந்துடாமல் இன்னிக்கு எனக்குச் சான்ஸ் கிடைச்சது மைசூர் சாமராவ் group இல் தான் மெயினா சிrை விலாவிலே சூடு வ ங் கி யி ரு க் கே ன் லார்’ - .ெ ப. ரு ைம ய க சொக்காயைத் துக்கிக் காண்பிக்கிறார். ஒண்னுமில்லே எலரு கூட காஞ்சு போச்சாம். எஸ்ருன்னா தெரியு மோன்னோ? உலை நீர்! ஒரு தம்ளர் எடுத்து என் மேல் வீசி அ டி ச் சு ட் ட ர் : அப்புறம் திருநெல்வேலி அய்யாசாமி அய்யரிடம் கொஞ்ச நாள் பதமானேன். பால் பாயஸம் அந்த மனுஷன் பண்ணனும், சாப்பிடனும், அதில் அவன் போடற சொக்குப் பொடி மந்திரத்தை யாருக்கும் சொல்லாமலே தன்னோடேயே கொண்டு போயிட்டான். அவர் கிட்ட அம்சமிருந்தது. அதனால்தான் அபரிமிதமான பக்தியில், வாயில் அவன்னு வரது, இதையெல்லாம் யாரிடம் சொன்னால் ஏத்துப்பா? முன்னால் யாருக்கு இந்தப் புள்ளிகள் பேரே தெரியும்? யாருக்கு முன்ன்ாலே சாப்பிடறதுலே அக்கறையிருக்கு? நான் என்னத்தை