பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 7

கிறதோ? சீ- என் மேலேயே எனக்கு ஒரு சீற்றம் உண்டாகிறது. அல்பனுக்கு வாழ்வு! என்பாடு திணறிப் போச்சு இடுப்பில் ஒரு பொத்தானை அவிழ்த்து விட்டால் தான, வயிற்றை இறுக்குகிறது.

ஆனால் மானேஜர் என்னவோ வெறி பிடித்தாற் போல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் பச்சைக் குழந்தை மாதிரி. வயிறு தெரியாமல், -

நான் எழுந்து அவரிடம் சென்று பின்னால் நின்று அவரிடம் குனர்கிறேன். -

மானேஜர் கோபத்துடன் என் கையை உதறுகிறார் “சரிசரி, நீ என் முழங்கையைத் தொடறது ஏன்னு தெரியும். பெரிய கொத்த வால், ரேஷன் ஆபி வர் அரெஸ்ட் பண்ண வந்துட்டான். ஒருநாள் இப்படியும் தான் போ! எங்கே போனாலும் எப்போப் பார்த்தாலும் வாய் விலங்கு?’’

காட்டு யானை போல் பிளிறுகிறார். எல்லாரும் என்னைப் பார்க்கிறார்கள்.

“ஒய் ராயரே, எங்கேய்யா போயிட்டீர்?” ‘இதோ இருக்கேன் அண்ணா பதறி ஓடி வருகிறார். ‘அந்தப் பாதாம்கீரை இன்னொரு கப் ஊத்துங் களேன்: ஒழுங்காய்ப் பரிமாற வந்திருக்கேளா, கொலு வெச்சுப் பார்த்தாலே பசி தீர்ந்துடுமா? உமக்கு என்னவோய் பில் தானே? ஊத்தும், ஊத்தும், அம்பி என்னைத் தொடாதே, சொல்லிட்டேன். பின்னாலிருந்து மேலே மூச்சு விடாதே, சொல்லிட்டேன். நான் அப்புறம் கெட்டவனாகி விடுவேன். என்னைக் கட்டுப்படுத்த நீ uuri fr? Get out!”

எல்லாரும் என்னைப் பார்க்கின்றனர். சொரணை கொண்டாட எனக்குத் தகுதி எது? அதுவும் ஸார், உங்களிடமா? ஆனால் விழிகள் உறுத்துகின்றன.

12