பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 179

ஊரடங்க நேரமாகி விட்டதா? அதற்குள்? தெருவில் சந்தடியே காணோம்! நேரம் என்ன இருக்கும்? மானேஜர் கைக் கடியாரம் அணிவதில்லை. எப்படியிருந்தால் என்ன? எங்களுக்கு இது திருட்டு நேரம்.

மொண மொணத்துக் கொண்டே நடக்கிறார். ஏதேதோ உறுமல்கள், குமுறல்கள், உருப்படியாக வார்த் தைகள் புரியவில்லை. இடையிடையே வெருட்டல்கள். பொட்டென நடுவழியில் நிற்கிறார்.

‘அம்பி, i am sorry. நீ சொன்னதைக் கேட்கவில்லை. வயத்தைப் புரட்றது.’

ஏன் புரட்டாது ? ஐந்து கப் பாதாம் கீரை உள்ளே தள்ளினால் ? -

‘அம்பி, i am sor-'’ ஒரமாய் ஒதுங்கக் கூட குமட்டல் இடம் கொடுக்கவில்லை. நின்ற இடத்திலேயே வாந்தி எடுச்கிறார் அவர். தலையைப் பிடித்துக் கொள்கிறேன். மறுக்கி மறுக்கி மனுஷன் அவஸ்தைப்படுகையில் வேதனை யாக இருக்கிறது. சந்திரன் எங்களைப் பார்த்துச் சிரிக் கிறான்.

‘‘sgibl 5, am sorry.’’ எனக்குச் சிரிப்பு வருகிறது. அடக்கிக் கொள்கிறேன் எல்லாத்துக்கும் ஒரே காசிக் கயிறு i am sorry”

இங்கே நடுவழியில் வாய் கொப்புளிக்கத் தண்ணீருக்கு வழியில்லை.

பாலாகோபம் நியாய கோபம். அடிப்படைக் காரணம் நான்தானே! எனக்குப் பார்ட்டி இல்லாமல் வாழாதா? எதையோ சாக்கிட்டு ஏதோ ஒண்ணு. பொய்மையின் ஜிகினாத்தான் வாழ்க்கையின் உள்ளோட்டமாக விளங்கு கிறது. என்ன துரியதான உணர்ச்சியிருந்தாலும் அதன் கட்டுக் கோப்பின் காரைப் பூச்சாகப் பொய்மை இன்றிய மையாதது போலும்.