பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு  !

இதென்ன கனவு கலைக்கக் கனவுள் கனவா? இல்லை இல்லை. நனவேதான். இல்லி பில்லி சூன்யமா?இப்படியும் ஒரு மோப்ப சூ ட் சு. ம ம ? உன்னைத் தப்பிக்கவே முடியாதா?

என்னுள் எல்லாமே கழன்று போனால்? குரங்கு போல் என்கைகள் தாமே கூப்பிக் கொண்டன.

‘பாட்டி, பாட்டி!’ அந்த வெள்ளை முழியில் கறுப்பு மூழி ஆடற பள் பளப்பு, பார்த்தவனுக்கல்லவா தெரியும்? முழியா அது: என் சகடக்காலைச் சம்ஹரிக்கத்துடிக்கும் விஷ்ணு சக்கரம் அல்லவா? கைகூப்பிக் கொண்டு.

‘பாட்டி பாட்டி, இங்கே என்னை ஒண்னும் பண் னாதே, உன்னோட பேசாமல் வந்துடறேன்.’

சுற்றுமுற்றும் பார்த்தாள். நான் படுத்திருந்த திண் ணையைத் தாண்டி இன்னும் மூடியிருந்த வாசற் கதவின் மேல் அவள் பார்வை ஒரு கணம் தயங்கி, என்மேல் மீண்

‘அப்படியா? அதுக்குள் பகதிக்குப் பஞ்சோடு கட் டிய கூடு அகப்பட்டுடுத்தா? சரி, இப்போ யோசிக்க நேர மில்லை. உம்-கிளம்பு.’

பெரிய ஆளு, ஆள் செத்த பிறகு ஆராய்ச்சிக்கு ஆஸ் பத்திரிக்குக் கொடுக்க வேண்டிய மூளை.

வீட்டுக்கு வந்ததும் என்னை இழுத்துப் பிடிச்சுத் துணில் கட்டிப் புளியமிலாறினால் வீறுவீறென வீறி, பிறகு கட்டிக் கொண்டு அழுததை இப்போ நினைச்சாக் கூடத் தொண்டையில் அடைக்கிறது,

ஆனால் ஒன்று. அவளும் அதே பழையதைத்தான் சாப்பிடுவாள். பழையது தின்கிற பாட்டிதான்; பலகாரப் பாட்டியல்ல. ஆட்டுக்கல்லும் தோசைக்கல்லும் மட்டும் இருந்தால் போதுமா? மாவும் எண்ணெயும் மிளகாப்