பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@

தேங்காய்ப் பறியில் Rs. 479, 28பை என்று முத்தையா என் கணக்கில் கட்டினான்.

‘முன்னுாறு போதும் அதுவே அதிகம்’ என்று ஆகே, தேததற்கு

‘கணக்குன்னா கணக்கு இருக்கட்டும் நீ எங்கே போறே? எனக்கு வேணும்னா கேட்டால் கொடுக்க மாட் டியா? இத்தோடு விட்டதோ? எங்கே போய் விடுமுன்னு தெரியல்லியே!”

மு. த் ைத யா வேலூருக்குக் கொல்லைப்புறமாக அலைஞ்சுண்டிருக்கான், லீவு எல்லாம் கரைஞ்சுண்டிருக்கு பணம் தண்ணி பட்ட பாடுதான் பலன்? பலன்? ?

‘அவனுக்குத்தான் வெளிச்சம். முத்தையாவுக்கு விழி விண்ணில் சொருகுகின்றது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சு அவ திரும்பி வந்தால், அம்பி, நீ எனக்கு ஒரு பறி பூரா கொடுத்துடு. வேண்டுதலில் உன்னையும் என் வீட்டுப் பிள்ளையா அப்பிடித்தான் சேர்த்துட்டிருக்கேன். முருகனுக்கு ஒரு பறி பூரா உறிச்சு, இளநீர் அபிஷேகம் செய்வதாக வேண்டிக் கிட்டிருக்கேன்.’ தொண்டையை அடைக்கிறது. இத்தனைக்கும் கோமு தலை கூடக் காட்டவில்லை.

- இன்று அற்புதமான காலை. முஸ்தபா கபேயில் விம் போட்டுத் தேய்த்துக் கழுவித் துடைத்துக் கவிழ்த்திருக்கும் கண்ணாடித் தம்ளரின் பளிங்குத் துல்லியம். நீலப் பளிங்கு. நீலோத் பலத்தின் நலுநலும். நீலோத் பலம் பார்த்ததில்லை. ஆனால் சொல்லின் ஒசையில் மயங்கிப் போனேன். சொல்லும் இச்சமய்த்துக்குத் தானே வருகிறது !

சுவர்களின் உள்ளிருத்து நீலத் தண்ணொளி, பொங் கப் போகும் பாலின் மிதப்பு கட்டுகிறது. அதிலேயே சுவர்