பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 305

டாலே ஒரு பயம், அருவருப்பு, உறவு மனுஷாள் தான் எங் களைக் கண்டு விலகினார்களோ, இந்தக் கஷ்டமும் அவ மானமும் தாங்கமுடியாமல் நாங்கள்தான் ஒதுங்கிவிட் டோமோ? நாங்கள் செய்தது தப்பா, சரியா, இப்பேர் கேட்டால் கூட எனக்குக் குழப்பம்தான். எனக்கிருந்த ஒருதுணை, மரகதமும் போய்விட்டாள்.

‘மருந்து, மந்திரம். மாயம்-பார்க்காத சிகிச்சை இல்லை இடம் மாறினால், மனம் மாறுமோ என்று இது வரை எத்தனை மாற்றல் வாங்கியிருப்பேன் ? What use?, இத்தனைநாளாச்சே, வேகம் குறைஞ்சிருக்கும்னு நினைச்சேன்?-” உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தலையை ஆட்டினார்.

வானக் கவான், முழு நீலம் திரண்ட செண்டாய் அலக்காகத் தொங்கிற்று.

‘அவள் தாயார் காலமானபிறகு பாலாவிடம் ஒரு மாறுதல் கண்டது. அம்மா இடத்துக்குத் தான் இட்டு,நிரப் பணும்னு தானே தோணியிருக்குமோ என்னவோ? அவளு டைய Mental development எந்த ஸ்டேஜிலேயிருக்குன்னு யாருக்குத் தெரியும்? நான் டாக்டரிடம் போறது. தனியா வைத்யம் பாக்கறதுன்னெல்லாம் விட்டுட்டேன். What use? சமையல் எல்லாம் தானே கத்துண்டு தானாத்தான் செய் யறா. அவள் ஊமையே அன்றி செவிடுஇல்லை. நாம் பேசுவது. அவள் சொல்வது எல்லாம் அவளுக்குக் காது கேட்கும் போலத்தான் தெரிகிறது. கவனம் வாங்கிக் கொள்கிறது. ஆனால் அவளுடைய அந்த அனுபவத்தைப் பற்றி மட்டும் பேசக்கூடாது. திகில் மூட்டங்கள் முகத்தில் கூடுவதைப் பார்த்தால் நமக்கே கதி கலங்கிவிடும்.

“ஒரு வார்த்தை எழுதப்படிக்க வரவில்லே.

‘இன்னும் அவளைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது ?