பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 Ger rfr.

‘நான் பார்த்து பட்டுனு சொல்லிட்டேன். எனக்கு அப்பிடிக் கெட்ட பேரும் உண்டு என்ன செய்ய? வழவழா கொழ கொழாப் பண்ணிக் கடைசி வரைக்கும் களுத்தை அறுக்கற விசயம் என்னாத்துக்கு? அவர் வீட்டுக்கு முதல் ஆசாமி, கடைசி ஆசாமி எல்லாமே அவர் தான். ஏன் மறைக்கணும்? -

‘உங்களுக்குத் தொண்டையிலே ட்யூமர் வளர்ந் திருக்குது. X-ray எடுத்து Conform பண்ணிக்கலாம்.’

“Oh! நாற்காலியிலே செளகரியமா சாஞ்சுக். கிட்டாரு. காப்ரா ஆவல்லே. நானும் அனுபவமா பார்த்தாச்சு. அந்தக் கழுத்து, மண்டை formation ஆணவங்க அப்பிடித்தான் நெஞ்சுக்கனம் படைச்சவங் களாயிருக்காங்க. ஆனால் அது மாதிரி ஆளுங்க ரொம்ப சொல்பம் தொலையே செய்வாங்க. Good for them. Good for us.

‘ராத்ரியே, X-ray படிச்சுட்டேன்.

    • Matignant type.”

“So?”

“நான் டாக்டர். treatment எடுப்போம். நீங்க தஞ்சா ஆருக்குப் போlங்களா? இல்லே நான் ஸ்பெஷலிஸ்டைத் தருவிக்கட்டுமா?”

“I wifi iet yow know.”

“We must act quickly, sir.”

‘குஞ்சிரிப்பா சிரிச்சுக்கிட்டுப் போயிட்டாரு. அப்பறம்

ஆள் வரல்லே. நான் ரெண்டு மூனுதடவை போன் செய் தேன். ஆள் கிடைக்கல்லே.

போன வெள்ளிக்கிழமை சிவராமன் பகல் பத்து அமணிக்கு பாங்கிலிருந்து தபதிபன்னு ஓடி வந்தான் முகத்தில் பேயறைஞ்சிருக்குது.