பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 4

பாடை சேமங்சலம் ‘ஊ.ஊ” நாயின் ஊளை. மலர் மாலை. ஊது வத்தி ஒலம் ஒப்பாரி சந்தனம் லாமகானம் கோலம் செம்மண் ஆரத்தி வேத கோஷம் கொட்டு மேளம் ‘ஊம் ஊக் கெட்டிமேளம் அடையாளமாக சாஸ்திரிகள் ஆள் காட்டி விரலை ஆட்டுகிறார் “கொட்டு கொட்டு:’

பிப் பீஜி” பச்சைத் தென்னங் கீற்றுப் பந்தலடியில் எனக்கும் காமுப் பாட்டிக்கும் கலியாணம் கெளரி கலியாணம் வைபோ-ஓ ஒ-கமே” காமுப் பாட்டிக்குத் தலையில் கட்டு முடி சொந்தமா, சவுரியா ? ஐய, காமுப் பாட்டி என்கையைப் பிடித்துக்கொண்டு - நெளியும் நாணம் கோணலில் நான் முகம் குனிகிறேன். என் மோவாயை அவள் நிமிர்த்துகிறாள். மோகாம்பரி அம்மனே நேரில்வந்து எங்களை ஆசீர்வதிக் கிறாள். ‘காரிகம் எல்லாம் சுபமா முடிஞ்சபின் எனக்கு ரெண்டு துள்ளுக் குட்டி விடுங்கள்!” ஹா ! தேவியின்கருணை!

-ஸ்விட்ச் CFF

{} {} .