பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஒா, ச. ரா

என் விழிகள் வழிகின்றன. கன்னங்கள் குளிர்கின்றன. அதுகண்டு அவள்முகம் சஞ்சலிக்கின்றது. உதடுகள் நடுங்கு கின்றன.

என்ன அம்பி!- ஏய் ஆ ள் உண்றதை எ ன்ன வேடிக்கை?”

போட்ட அதட்டலில் அத்தனை குருவிகளும் கீச்: ச்ே!!” - கத்திக்கொண்டு கொக்கரித்துக் கொண்டு, சிரித் துக் கொண்டு சிட்டாய்ப் பறந்தன.

நாலுபேரோடு பிறப்பதென்பது இதுதானா? குடும்ப குதுகலம் என்பது இதுதானா? எல்லாமே எனக்குப் புதிதாயிருக்கிறது. ஆனால் புதிதுமில்லை. அத்தனையும் ரத்தத்தில் உறங்கிக் கொண்டு அவ்வப்போது ஏக்கங்களாய் வெளிப்பட்டுக் கொண்டு, ஏக்கங்களாகவே மீண்டும் ரத்தத்திலேயே மறைந்துபோய், எங்கோ, ரத்தத்தில் ஜீரா சுரக்கு மிடத்தில் ஊறி ஊறி, இப்போ வேளைக்கு ருசிகளாய் எழுகின்றன.

அப்போ சுவைமட்டும் கண்டேன். இப்டோ அதன் பாஷை, பாடம், பெயர் புரிந்து கொள்கிறேன்-அவ்வளவுதான் .அவ்வளவுதானா ? மடையா, எல்லாத்தையும் புரிந்து கொண்டுவிட்டாயா?

மரத்தை மறைத்தது மாமதயானை, மரத்தில் மறைந்தது மாமதயானை. அப்போது, கையில் நாயன்த்துடன் கோமு நுழைந் தாள

கோமு

அந்த நாட்களை என்னென்று சொல்ல ? என் வாழ் நாளில் ஒரு இடை வேளை என்பேன். அதற்குள்ளேயா