பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 53

அணில்கள் மிரள்கின்றன.

இடுப்பு வரை வெறும் உடம்பு. அப்புறம் வங்கி வழங்கிய காக்கி யூனிபாரம் நிஜார், அவன் புஜங்களில், மார்பில், முதுகில், வேர்கள், கரணைகள், உருண்டைகள், முடிச்சுக்கள். அவன் அங்க அசைவுகளில் ஒன்றையொன்று ஒடிப் பிடித்து விளையாடுகின்றன. .

‘செந்தாமரைக்கு என்மேலே சலிப்புத்தான். நான் என்ன செய்ய? மூத்தா போய் ஒரு மாதத்துக்குள்ளேயே இவளைப் பேசி முடிச்சு கட்டி, வீட்டுக்கும் இட்டாந்துட்டேன். சோமுவுக்கு என்மேலே ஒரே வெறுப்பு. நீயே கண்டிருப்பே. கோமுவும் நானும் சரியாப் பேசிக்கற தில்லே. நான் என்ன செய்ய? கோமுவின் அம்மா என்னிக்குமே சீக்காளி. கடைசி ஒரு வருடம் கட்டிலும் பாயுமாக் கிடந்தா. வீடே நாறிப் போச்சு. பார்க்காத வைத்தியமில்லே, ப ண் ண | த பூசையில்லே. இது எப்படியும் போற கேசுன்னு எப்பவோ தெரிஞ்சு போச்சு. ஆனா கடைசி மூச்சு பிரியற வரைக்கும் செலவுக்கு அஞ்சினேனா? கோமுவையே கேளு. அவள் ஆத்தாள் மேலே அவளுக்கு ஒன் னும் பாசம் ஒழுகிடல்லே. ஆத்தா போனப்போ, போ ன .ே த மேலாச்சு. கோமுவுக்கே தெரியும். ஆனால் என் மேல் உள் பகை இ ன் ன மும் கொண்டாடிட் டிருக்கா. செந்தாமரை ஏழை வீட்டுப் பொண்ணு இவ மாதிரியா, இவளுக்கென்ன? கொணாந்து போட அப்பனும், ஆக்கிப் போட சித்தியும் இல்லாட்டி, இவ, மாடியிலே குந்தி கிட்டு, வேலையத்த வேலை, துருத்தி ஊதிக்கிட்டு இருக்க முடியுமா? கோமு ஒரு துரும்பை நகர்த்த மாட்டா ஒருநாள் அரைநாள் கோமு அடுப்பண்டை போக நேர்ந்தால், அவள் ஆக்கினது வாயில் வெகக ஆவாது. அன்னிக்கு நான் முஸ்தாபா கஃபேலே பார்த்துக்குவேன். சித்தாத்தா ஆக்கிப் போட்டது ஆவும். சித்தாத்தா ஆவாது. இதென்னய்யா நியாயம்?-சூ!”