பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 55

படுவான்னு சொல்லமாட்டேன். பைத்யம் அதுக்கு. அத்தக் கட்டிக்கிட்டு அளுதுண்டிருந்தால் போதும். ஆனால் ஏட்டய்யா என் மருமவப் பிள்ளை இருக்காறே. அவருக்கு எப்பவும் என் சொதது மேலே ஒரு கண்ணுதான்...அவர் ஒண்னும் செய்துக்க முடியாது. அவருக்கே தெரியும். ஆனால் பீராயறவரைக்கும் பீராயலாம்! களத்து மேட் டுலே போர் அடிச்ச நெல்லுக்கு என்னிக்குமே ஒழுங்கா கணக்குக் கிடைக்காது, கண்னெதிரிலேயே மடியிலே கட் டிக்குவா அதுமாதிரி அடிச்ச போருக்கடியிலேயே நேக்கா. ரூபாய்க்கு இடுக்கிலேயே ஒளிஞ்சிட்டுருக்கும். மணியை அளந்தால் மரக்காலுக்குக் குறையாது. அதுமாதிரி.”

முத்தையாவுக்குப் பேச்சு களைகட்டிப் போச்சு, பேச்சு தடையில்லாமல் தன் பிராசத்தைப் போட்டுக் கொண்டு தண்டவாளத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது.

குரங்கு பறித்த இளநீர் நிசமாவே படா டக்கர் அந்தப்பத வழுக்கையில், அந்தப் படு தித்திப்பை அதனால் எப்படி அடையாளம் கண்டுபிடிக்கமுடிகிறதோ?

“ஏட்டு லேசுப்பட்ட ஆளுன்னு நெனைக்காதே. துட் டுலே கெட்டி. யாரோ லேத்து சம்மந்தமில்லே. என் அக்கா மவன்தான். தாயுமில்லே தகப்பனுமில்லே. நான் தான் டிபார்ட் மென்டிலே கொண்டு வெச்சேன். அப்பேசி அங்கே சொன்னதைக் கேக்கறவங்க இருந்தாங்க. சொல் லுக்கு மதிப்பு இருந்தது. பொண்ணையும் கட்டிக் கொடுத் தேன் கட்டிக் கொடுத்த நாளிலிருந்து இங்கேதான் ரெண்டு பேரும் இருக்காங்க. ஆனால் நான் ஒண்னும் வீட்டோடு மாப்பிளையா தேடல்லே. சாப்பாட்டுக்கு ஏட்டு ஒண்னும் கொடுத்ததில்லை. நானும் கேக்கறதில்லே,கொடுக்காட்டிப் போவுது. முத்தையா ஏமாளி. சாப்பிட்டுப் போறாங்க. ஆண்டவன் புண்யத்திலே ஒண்னும் குறைவில்லே.

அம்பீ, .ெ சா த் து ப் பத் தி விபரம் ஒண்ணு சொல்லுறேன் கேளு, சேர்க்க ஒருத்தன் அழிக்க ஒருத்தன்.