பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5& @T9fr.

கடல் ஒண்னு அப்புறம் பாலே இருக்குமா ? பாலை விடு, தண்ணிக்கு வழியிருக்குமா ? அப்புறம் கடலே சேறுதான். அந்த சேத்துலேயும் என் செந்தாமரை பூத்துக்கிட் டிருக்கும். வருடா வருடம் !--’’

சிரிப்பு அந்தக் காலை வேளையில் காலை வெளியில், காலை வெய்யிலின் ரஸவாதத்தில் கவலையே சிரிப்பாக மாறிய சிரிப்பு.

கோமு குழலை ஆளத்தவங்கிடக்கிறான். முத்தையா உடலை அடக்கத் தவிக்கிறான். ஒவ்வொருவனுக்கும் ஒரு பிறவி வேட்கை வேட்கையை வெட்கத்தால் மூடி. மூட்டத்துக்குப் பொருள் தரும் சிரிப்பு.

எனது வேட்கை என்ன ?

உடலை முறித்துக் கொண்டு எழுந்து நிற்கிறான். அனுமாரின் விசுவரூபம்.

- தலைக்கு மேலே வேலை நிக்கிது. நான் இங்கே பேசிக்கிட்டேயிருக்கேன். இன்னிக்குப் பசு ஒண்னு விலை பேசணும். அதுவும் செனைப்பட்டிருக்கு. அவளோடே சேர்ந்துகன்னு போடற மாதிரி. வீட்டுக்கு மகாலச்சுமி யாட்டம் ஒண்னு இருந்தா நல்லதில்லே ? செந்தாமரைக்கு ஆசை. அவளுக்கு இந்தத் தடவை தாய்ப்பால் சிரமத்தான். போனதடவை இரட்டைப் பிறப்பு ரெண்டு பக்கமும் தொங்கி, உசிரையே குடிச்சுட்டுது : அம்பீ, மாலைவரை நீ இங்கேயே இரு உனக்கும் உடலுக்குச் சுகமாச்சு. எ ன க் கு தோப்புக்குக் க | வ லா ச் சு. மதியம் சாப்பாடு அ னு ப் ப ச் சொல்லுறேன் ! அம்பி, நீ தான் என் பேச்சைப் பொறுமையா, கவனம் கொடுத்துக் கேக்கறே. அத்தாலே நானும் பேசிட்டிருக்கேன். முத்தய்யா வுக்கு ஆபீசுலே ஒரு பேர் ‘முத்தையா அகராதி ஆனால் அதுலே முற்றுப்புள்ளி கிடையாது. அச்சுக்கோர்க்க மறந்துட்டான் ஆண்டவன் ! ஒ- ஹ் ஹோ !! “