பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 லா. சா. ரா.

வயல் பரப்பை அளவெடுப்பது போலும் ரயில் தொடர் வளைந்து ஓடுகிறது.

‘புக் புக் புக் புக் புக்-மில் தோப்பின் எந்த மூலையிலோ, முற்றின மட்டை ‘உள்’ என்ற அசதி மூச்சுடன் சுழன்று

பொத்தென்று விழுகின்றது. அம்மாடி விடுதலை : எத்தனை நாள் இந்த மூதுடன் ஒட்டி ஊசலாடி யிருப்பது ? “ஒஹோய் ! அஹாய் !!” வயலுக்கு வயல், கூப்பாடி லேயே சங்கேத பாஷையில் விவசாயியின் சம்பாஷணை. எங்கோ ஒரு சோக மலர் பூத்துக் கொண்டிருக்கிறது. அல்லேல் காற்று வாக்கில் ஏது இந்தக் கவிதா மணம் ?

“அம்மே ‘ தொண்டை விம்முகிறது.

எனக்குப்பாக்கியமில்லை. பசுவினால் தான் இத்தனை உருக்கமாக, முதுகின் நடுநரம்பிலிருந்து நார் உரித்து, நாபிமலரைத் தொடுத்து.

ஸ்பஷ்டமாய் ப்ராண ஸ்வரத்தை உச்சரிக்க முடியும். தோல் பொசுங்கலின் லேசு நெடி. இங்கிருந்து இரண்டு பர்லாங்கு தூரத்தில் தோல் பதனிடு தொழிற் சாலையாம்.

“கொக்கரக் கொக் கொக் கொக்கோ !” வேளை தப்பாத ஜாமக்கோழி.

சிறகையடித்துக் கொண்டு, கழுத்துச் செதிள்களைச் சிலிர்த்துக் கொண்டு ஆண்மையின் சிராக்கொண்டை. செக்கச் செவேல் சேவல், சாலையில் சுமை தாங்கி அருகே களியாந்துறைக்குப் பத்துமணி பஸ் பூம் பூம் இதோ கிளம்பிவிட்டது. gear