பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 &T. &. pyrr,

என்னால் கண்ணைத் திறக்கமுடியவில்லை, இல்லை-நான் கழுகு இல்லை- என்னதான் முயன்றாலும் என்னால் கண் ணைத் திறக்க தெரியவில்லை. பிசின் போட்டுக் குரூரமாய் இமைகள் ஒட்டுக்கொண்டிருக்கின்றன. நான் என்னிலி ருந்து கழன்று கொண்டிருக்கிறேன். கழன்று கொண்டே யிருக்கிறேன். கழன்று கொள்கிறேன். கட்டிலில் கண் மூடி, புன்முறுவலுடன் மல்லாந்து கிடக்கும் என்னை வியப்புடன் பார்க்கிறேன். அப்பா என்ன லேசு என்ன சுகம் என்ன இதவு என்ன மிதப்பு

நான் அந்தர்யாமி அகண்ட மோனத்தின் திறவுகோல் இயற்கையின் இயக்கத்தின் ஜீவன்.

-அம்பி அம்பீ! அம்பி!!! நான் என்னுள் அவசரமாகப் புகுந்து கொள்கிறேன் ‘என்ன அம்பீ! அப்படிக் கட்டையாக் கிடந்தே? எட் டுத்தடவை கூப்பிடறேன் அசைக்கிறேன் அசையக் கூட இல்லை. என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்!”

எழுந்து உட்கார்ந்தேன். பூட்டுக்குப்பூட்டு வலி முறித் தி இ

-இவள் யார்? ஏன் வந்தான்? உடல் இவ்வளவு பெரிய சுமையா? மீண்டபின் முன்னைவிடக் கணக்கிறது. சற்றுமுன் எப்படி விடுதலைச் சிறகாயிருந்தேன்! ஏன் வந்தாள் இவள்? கோமு உட்கார்ந்து சாப்பாடு மூட்டையை அவிழ்க் கிறாள்.

மீண்டும் பசி அகோரப் பசி, உப்பும் சோறும் தின்று தின்று மீண்டும் சுரணை கெட்ட இந்த வாழ்வுடன் தொடர்பு)