பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு ?

3

சொல்லிவிட்டு அவன் போய் விட்டான். இரவே முழுமையில் வந்தாகிவிட்டது காலடியில் ஒரு தவளை தத்தித்தத்தி-வயல்புறத்தில் எதற்கும் வேளை கிடையாது போலும் கையைத் தட்டி னேன். சோகமாய் என்னைப் பார் த் து வி ட் டு ,

& தத்தித்தித்தித்

தன் பசிக்கு விலங்கு இரையை வேட்டையாடு கிறது, இரைக்கு உயிர்தப்ப வேண்டியிருக்கிறது. இரை விலங்குக்கு இரையாகிக்கொண்டு இரை அப்படியும் பெருகிக்கொண்டு இரு முரண்களும் ஒருங்கே நிறைவேறிக் கொண்டு தானிருக்கின்றன.

நியாயம் கேட்க நீயும் இல்லை நானும் இல்லை. ஏட்டு, என்றேனும் ஒரு நாள் நீ என்னைக் கல்வி விடுவாய்.

ஏனென்று கேட்க நான் யார் ? அதுவரை எனக்குள்ளது ஒன்றுதான் தத்தித்தித்தித்தித்சிரிப்புக்கூட வருகிறது. காற்று குதுகுறு வென்று திடீரெனக் கிளம்பிற்று. பெரும் கேவல் ஒன்று என்னிடமிருந்து கிளம்பிற்று, அதில் நான் மிரண்டு போனேன். பிறவியின்-எனது மட்டுமல்ல - பிறவியின் பெரும் அசதி.

தலைக்கு மேலே நிலவு முகம் பிதுங்கிற்று. அம்மா நீ எங்கேயிருக்கே ? உன் கர்ப்பத்தின் இருளில் நானே எனக்கில்லாமல் மீண்டும் கலந்து விட வழியில்லையா ?

சரியாப் போச்சு. முதலில் நீ எனக்கு எங்கேயிருக்கே?

) {}