பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

‘கோமு என்ன சொல்றாள்? அசட்டுக் கேள்வி ஆனால் என்னால் அடக்க முடியாத கேள்வி.

கோமு சொல்ல என்ன இருக்கு நான் பிறந்த வீட்டிலேயே இருந்துடறேன்னு சொன்னால் நான் விட்டுடுவேனா? அவனோடு அவள் வீடு. இது என் வீடு. செந்தாமரை வீடு, பெண்ணைக் கட்டிக் கொடுத்தப்பறம் பெரியவங்க நியாயத்தை அப்பிடித்தானே வகுத்து வெச்சிருக்காங்க சரியாத்தானே வெச்சிருக்காங்க! ஏன், உனக்குக் கோமுவோடு சங்கீதம் பேசிக்கிட்டேயிருக் கணும்னு இருக்கா?”

நான் முகத்தைப் பொத்திக் கொண்டேன். எனக்கு உடம்பு குலுங்கிற்று. முத்தையா ஆணியை சரியாக மண்டையில்தான் அடிக்கிறான். அவன் கேள்வியில் தெறிக்கும் நியாயத்தின் நிர்வாணம் எப்படிக் கூசுகிறது:

‘சரி இப்போ அங்கே கூட்டம் கலைஞ்சிருக்கும்.

வீட்டுக்குப் போவமா?”

‘இல்லை, நான் கொஞ்சம் பொறுத்து வரேன்” மங்கி வரும் இருளில் அவன் தயங்கி நின்றான். ‘அம்பீ”

நிமிர்ந்தேன். அருகே வந்தான். “இங்கே இனி நமக்கென்ன ஜோலின்னு, வீட்டுக்குத் திரும்பாமலே இப் ப டி யே கம்பி நீட்டிடலாம்னு பாக்கிறியா? அப்பிடி சேஞ்சே, ஏட்டுக்கு நீ என்னே விட்டுக் கொடுத்ததாவும். அப்படிச் செய்யாதே.” கை கூப்பினான். ‘நீ ஒடிப் போனால், ஒடிக்கிட்டேத் தான் இருப்பே.

அப்புறம் உதவாக்கறையாப் போயிடுலே. நீ என்னை விட்டு எப்பப்போவணும்னு எனக்குத் தெரியும். உனக்கு நான் ஏதாவது வழிபண்ணியாவணும். இல்லாட்டி என்