பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மழலைச் செல்வங்களை ரசிக்கவும் கூடிய ‘திட்டமிட்ட கற்பனை கலந்த இனிய நுகர்வுடன் கூடிய பண்பாட்டு மனம்’ கொண்டிலங்குகிறான் கவிஞன். அவன் ஒருவனுக்கேதான் இத்தகைய தனித்த - அல்லது விசித்திரமான குணம் உண்டு; அல்லது, இக்குண நலன் பிடிக்கும்.

சமுதாய வாழ்வு மட்டும் காவியக் கலைஞனுக்கு இருந்து விட்டால் போதுமா? போதாது.

அரசியல் ஞானமும் தேவைதான்.

“கவிஞன் இரண்டாவது அரசியல்வாதி,” என்கிறான் மாபெரும் புலவன் ஷெல்லி (Poet Shelly)

இப்படிப்பட்ட கவிதைத் தேர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு, நம் கண்ணதாசனை எடைபோடும் பொழுது, அவரது உடல் எடையைப் போலவே, அவருடைய கவிதைகளின் எடையும். மேற்படி கவிகளின் திறன் எடையும் மிஞ்சித்தான் நிற்கின்றன.

கவிக்குப் புகழே எல்லையாக அமைகிறது. அந்த எல்லையை நிர்ணயிப்பதும் நிர்மாணிப்பதும் நாம் தானே?

மக்கள் இல்லையேல், “மக்கள் கவிஞன்” எங்ஙனம் இருக்க முடியும்? மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் ஒரு

11