பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8. பெண் என்ற சித்திரம்!

‘ஜாதி ரோஜா’ என்ற என்னுடைய நாடகத்தை உங்களிலே சிலர் மேடையில் பார்த்திருப்பீர்கள்; பலர் ரேடியோவில் கேட்டிருப்பீர்கள். ஆகவே, அந்நாடகத்தில் அங்கம் வகித்த தேன்மொழியைப் பற்றியும் நீங்கள் கட்டாயமாக அறிந்திருக்கவே வேண்டும். அவள் ஆடலழகி. ‘அறக்கற்பு’மிகுந்த கணிகையான மாதவியின் பாரம்பரியப் பண்பு கொண்டவள்.

இளங்கோ அடிகள், மயல் மங்கையான மாதவியைப்பற்றிக் குறித்துச் சொல்லும் நிலையில், “மாமலர் நெடுங்கண் மாதவி” என்றும் “போதிலாள் திருவினாள்” என்றும் முருகியல் சுவை தொனிக்கக் குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரம், கண்ணகி சிலம்பை உடைத்த வரலாற்றைச் சொல்லும்.

விதியோ? வினையோ?. என்பதில் மாதவி யாழை உடைக்கும் புதுக் கதையைச் சொல்கிறது.

மாதவியை வர்ணிக்கப் புகுகிறர் கவிஞர். தமிழ் ஒளி.

53