பக்கம்:கவிஞர் கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழனைக் காத்த மோசியார்

35



செய்த சட்டையை அணிந்திருக்கிறான். அதில் அம்பு பட்ட தொளைகள் இருக்கின்றன. உண்மையான வீரன்.”.

“இங்கே எதற்கு வருகிறான்? பின்னாலே ஆயுதங்களோடு வருகிறவர்கள் யார்?

“பெரிய கடலிலே கப்பல் வருகிறதுபோல வருகிற இந்தக் களிறு, இயற்கையான நிலையில் இல்லை. அதற்கு மதம் பிடித்திருக்கிறது. அதைத் தடுத்து வசப்படுத்துவதற்காக அந்த வீரர்கள் வருகிறார்கள். அவர்களால் அடக்கமுடியவில்லை. வேண்டுமென்று இவன் இங்கே வரவில்லை, பாவம்! அயல் நாடு என்று தெரிந்தும் இந்த நிலையில் அவன் என்ன செய்வான்! அவனுக்கு ஒரு தீங்கும் வராமல் செளக்கியமாக ஊருக்குப் போய்ச் சேர வேண்டும்.”



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/37&oldid=1525778" இலிருந்து மீள்விக்கப்பட்டது