பக்கம்:கவிஞர் கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரை வகுத்த நக்கீரர்

41



‘மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்’ என்றே வழங்கினார்கள்.

‘வில்லுக்குச் சேரன், சொல்லுக்குக் கீரன் என்றது நக்கீரரைத்தான். அவர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். முருகக் கடவுளைப்பற்றித் திருமுருகாற்றுப் படை என்ற நீண்ட பாட்டை அவர் இயற்றியிருக்கிறார், அவர் பாடிய மற்றப் பாடல்களை அறிந்தவர்கள் குறைவாக இருந்தாலும், திருமுருகாற்றுப் படையைப் படித்தவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள். அதை ஒவ்வொரு நாளும் பக்தியோடு பாராயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/43&oldid=1527464" இலிருந்து மீள்விக்கப்பட்டது