பக்கம்:கவிஞர் கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவைப் பாட்டி

3



"அடடா! இந்த ஆயுதங்கள் எவ்வளவு அழகாகப் பளபளப்பாக இருக்கின்றன. மயிற்பீலியைச் சூட்டி அலங்கரித்திருக்கிறார்கள். காம்புகளெல்லாம், பண்ணின காலத்தில் இருந்த மாதிரியே. இருக்கின்றன. கொஞ்சமாவது மூளியாகவேண்டுமே! இவ்வளவு பாதுகாப்பான இடத்தில் இவற்றை நீ பத்திரமாக வைத்திருக்கிறாய். அதிகமான் ஆயுதக் கொட்டிலில் ஆயுதம் ஒன்றுகூட இல்லை. எல்லாம் கொல்லன் பட்டறையில் கிடக்கின்றன. ஒன்றாவது உருப்படியாக இருக்கவேண்டுமே! அவன் வேல், பகைவர்களைக் குத்தி நுனி சிதைந்துபோய், உடைந்து கிடக்கின்றது” என்று பாடினாள். தொண்டைமானுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதிகமானத் தாழ்த்தி, நம்மை உயர்த்திப் பாடியிருக்கிறாள்' என்று அவனுக்கு ஆனந்தம.

ஆனால் ஒளவை சொன்னதில் யாருடைய புகழ் வெளியாகிறது என்பது உங்களுக்குத் தெரிகிறது அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/5&oldid=1525679" இலிருந்து மீள்விக்கப்பட்டது