பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தன் அரசிருக்கையாகக் கொண்டவன். உறையூரைத் தனது அரசின் தலைநகராகக் கொண்டவன். அதன் காரணமாக அந்நகரை நன்கு செழிப்புற வளமாகச் செய்தவன். நல்ல முறையில் அரசு புரிந்து நீதி வழங்கியவன். இதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சியினை எடுத்துக் காட்டினால் இதன் உண்மை நன்கு தெரியவரும்.

ஒரு முறை இரு பெரும் முதியோர் தம்முள் மாறுபட்டு அதனைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, இவனை நாடினர். இவன் இளைஞனாய்க் காணப்பட்டமையின், இவன் அவ்வளவு அனுபவம் பெற்றிரான் என்று உணர்ந்து தம் வழக்கைக் கூறாது திரும்பிச் சென்றனர். இதனை அறிந்த கரிகால் சோழன் அம்முதியோர்களை அடுத்த நாள் வருமாறு கூறி, அப்போது நன்கு வயது முதிர்ந்த பெரியோரைக் கொண்டு, அவர்களின் வழக்கினைத் தீர்த்து வைப்பதாகச் சொல்லி அனுப்பினான். அவர்களும் இவனது பேச்சில் நம்பிக்கை வைத்து, அடுத்த நாள் வருவதாகச் சென்று விட்டனர். கரிகாற் சோழன் அடுத்த நாள் தானே கிழவன் போல வேடம் பூண்டு, முதியவர்களின் வருகையை நோக்கி இருந்தான். முதியவர்களும் வந்தனர். தம்முன் நரைத்த முடியுடன் காணப்பட்ட உருவத்தைக் கண்டனர். “ஆ! இவரே நம் வழக்கைத் தீர்த்து வைக்கத் தக்க பெரிய-