பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

யில்லாதவர்; இனிய குணமுடையவர்; பிணிப் புண்ட நட்புடையவர் ; பொய்யை என்றும் புறக்கணிப்பவர்; தம் பெயரைக் கூறாமல் என் பெயரையே பிறர்க்குக் கூறுபவர். ஆகவே, அவர் வராமல் இரார், அவருக்கும் என்னோடு வடக்கிருக்க இடம் ஒழித்துத் தருக” என்று அறிவுறுத்தியுள்ளார். பிசிராந்தையாரைப் பற்றிக் கோப்பெருஞ்சோழர் கூறிய தொடர் களையும் ஈண்டு நினைவு கூர்க. “இகழ்விலன் ; இனிய யாத்த நண்பினன் ; புகழ்கெடவரூஉ பொய் வேண்டலன் ; சிறந்த காதல் கிழமையும் உடையோன்” என்பன அத்தொடர்கள். இங்ஙனம் பாடும் புலவராயும், புலவர்களால் பாடப்பட்ட புரவலராயும் கோப்பெருஞ்சோழர் துலங்கினார்.