பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

குறிப்பிட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம். கிள்ளிவளவனுக்கு மலையமான் திருமுடிக்காரி பகைவன் தான். அதன் காரணமாக அவனது மக்களையும் கொல்லக் கருதி அக் குழந்தைகளை யானைக் காலில் வைத்து மிதித்துக் கொல் லுமாறு செய்திருந்தார். அந்தோ! கள்ளம் கபடு அற்ற குழந்தைகள் கொல்லப்படுதலைப் புலவர் கோவூர் கிழார் அறிந்து சகித்திலர். ஆகவே, உடனே கிள்ளிவளவனை நோக்கி, “புறவுக்காகத் தன்தசையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்ரவர்த்தியின் மரபில் தோன்றினவனே” என்று விளித்து, இம்மக்கள் புலவரது வறுமை கண்டு சகியாது அவர்கள் வறுமைதீர உதவும் வள்ளல் மரபில் தோன்றியவர்கள். இக் குழந்தைகள் தாம் யானை முன்பு தம்மைக் கொல்லுதற்கு இடப்பட்டுள்ளோம் என்பதை அறியாது, அழுகையையும் மறந்து யானையைக் கண்டு களிக்கின்றன. இந் நிலை யில் நீ விரும்பியதைச் செய்க” என்றதும் கிள்ளிவளவன் குழந்தைகளைக் கொல்லாது விடுத்தனர். இதனால் இவர் புலவர் அறவுரைக் குப்பெரிதும் செவி சாய்ப்பவர் என்பது தெரிகிறது. அல்லவா? இவரது வன்மையையும் கோவூர் கிழார் அழகுபடச் சித்திரித்துள்ளார். இவரது உறந்தையம்பதி “அடுதீ அல்லது சுடுதீ அறியா ”தாம். அதாவது உணவு சமைக்க எரிக்கப்படும் தீயே அன்றிப் பகைவரால் கொளுத்தப்படும் நெருப்பை அறியா-

2637-4