பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அவனை இவ்வரசப் புலவர் பசிப்பிணி மருத்துவன் என்று பட்டம் ஈந்து அகம் மகிழ்கின்றார். அதாவது, பண்ணன் பசி என்னும் நோயைத் தீர்க்கவல்ல வைத்தியம்மை பண்ணனது இல்லம் இளஞ்சிறார்களால் நிரம்பப் பெறுவதால் இரைச்சல் மிக்கு இருந்தது. என்பதை ஓர் உவமை வாயிலாகக் கூறும்போது, நன்கு பழுத்த பழங்களைக் கொண்ட ஆலமரத்தில் பறவைகள் கூடி ஒசை செய்வது போல் இருந்தது என்று குறிப்பிடுகிறார். இன்னே ரன்ன கொடைப் பண்புடைய பன்னால் பண்ணன் வாழ வேண்டும் என்பது கிள்ளிவளவரது உள்ளக்கிடக்கை. அதனால், தமது வாழ் நாட்களும் பண்ணனுக்கும் சேர்ந்து பன்ள்ை பண்ணன் வாழ வேண்டும் என்று கிள்ளிவளவன் கருதினர். 'யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய ' என்பது கிள்ளிவளவனர் உளமார வாழ்த்திக் களிக்கும் அடி. என்னே இவர் கொடையாளர்பால் கொண்டுள்ள அன்பு ! இத்தகைய சீரிய பண்புடைய கிள்ளிவளவர் தம் வாழ்நாள் உலந்ததல்லை மண்ணுலகிலிருந்து விண்ணுலகு புக்கார். அதுபோது புலவர்கள் வருந்திக் கூறிய பாடல்கள் நம் உள்ளத்தை உருக்க வல்லனவாகும்.

இயமன் சாதாரணமாக உயிர்களைக் கொண்டு செல்லும் முறையில் கிள்ளிவள வனைக் கொண்டு சென்றிருக்க இயலாது.

அதற்குக் காரணம் கிள்ளிவளவன்பால்